புலமைத்துவ பரப்பில் சிவஞானசோதி ஐயாவின் மறைவு பாரிய இடைவெளியை தோற்று வித்துள்ளது - காதர் மஸ்தான் அனுதாபம்

Published By: Digital Desk 3

07 Apr, 2021 | 03:42 PM
image

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த ஓய்வு நிலை அதிகாரி சிவஞானசோதி ஐயாவின் மறைவு தமிழ் தேசிய பரப்பில் மாத்திரமன்றி முழு  இலங்கையின் புலமைத்துவ பரப்பிலும் பாரிய இடைவெளியினை தோற்றுவித்திருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான   காதர் மஸ்தான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அவர்  மேலும் கூறியுள்ளதாவது,

தான் வகித்த உயரிய பதவிகள் மூலம் அனைத்து  மக்களுக்குமான மகத்தான சேவைகளை மனித நேயத்துடன் சிவஞானசோதி ஐயா ஆற்றியிருந்தார். 

எப்பொழுதும் மக்களுக்கு உதவிடும் உயர்ந்த குணங்களையே தன்னிடம் கொண்டிருந்த அவர் நேரகாலம் பாராது மக்களுக்காக உழைத்து வந்தார்.

நான் பிரதி அமைச்சராக பதவி வகித்த காலங்களில் பல்வேறு பட்ட அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு திட்டங்களை வகுப்பதில் எனக்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டதுடன் அதற்கு பின்னரான காலங்களிலும் நான் மேற்கொண்ட பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பில் தனது ஆலோசனைகளை வழங்கி அவற்றை மேம்படுத்தவும் இன்னும் செயற்றிறன் மிக்கதாக  விருத்தி செய்யவும் தனது வாண்மைமிக்க பங்களிப்பையும் நல்கினார். 

பல்வேறு அமைச்சுகளின் செயலாளராக பணியாற்றியதுடன் உள்நாட்டிலும் கடல் கடந்தும் பல பயிற்சிகளையும் உயரிய  விருதுகளையும் பெற்று தாய்நாட்டுக்கும் பெரும் புகழ்  ஈந்தார். 

தனது ஓய்வு நிலைக்கு பின்னரான காலப் பகுதியில் பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினராகவும் சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் பதவி ஏற்று நாட்டின் கீர்த்திக்கு வலு சேர்த்தார்.

அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தினர் நண்பர்கள் புலமையாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58