தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: 71.79 சதவீத வாக்குப்பதிவு

07 Apr, 2021 | 03:21 PM
image

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 71.79 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் திகதியன்று நடைபெற்றது. காலை 07.00 மணி அளவில் தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 07.00 மணி வரை நடைபெற்றது. 

பல வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே ஆண் வாக்காளர்களும், பெண் வாக்காளர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த தேர்தலில் முதன்முறையாக அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பிற்கு இடையே சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெற்றிருக்கிறது. வாக்களிக்க வருகை தந்த அனைத்து வாக்காளர்களின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு, அதன் பிறகு ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கையுறை வழங்கப்பட்டது. இதனை வலது கையில் அணிந்த வாக்காளர்கள் வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். வாக்களித்த பிறகு கையுறைகளை அகற்றி குப்பைத்தொட்டியில் போடுவதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தத் தேர்தலில் மாலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை பல வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. 

தமிழகம் முழுவதும் 42 இடங்களில் 75 வாக்கு எண்ணும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை அனைத்திலும் மூன்றடுக்கு பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மே மாதம் இரண்டாம் திகதியன்று காலை 08.00 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மேலும் இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசுகையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது' என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17