நாட்டு மக்களை ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசியக்கட்சி  அழைப்பு

07 Apr, 2021 | 07:10 AM
image

(செ.தேன்மொழி)

சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி பல்வேறு ஊழல் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் தற்பொதைய அரசாங்கத்தை வெளியேற்றி , சிறந்தவொரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டு வருகின்றது. அந்த செயற்பாடுகளில் நாட்டு மக்களும் இணைந்துக்கொள்ள வேண்டும் என்று ஐ.தே.க.வின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தண தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்னால் ஐ.தே.க.வினரால் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது ,

கடந்த ஒருவருட காலமாக அரசாங்கத்தினால் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் பாதிப்புகள் மற்றும் சிங்கராஜ வனத்தில் நீர்த்தேக்கமொன்றை அமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் தொடர்பிலும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இது போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். ஐக்கிய தேசியக் கட்சியும் அதனையே எதிர்பார்த்துள்ளது.

அதற்கமைய , இன்றைய தினம் (நேற்று) நாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதுடன் , சுற்றுபுறச் சூழல் பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் , நாட்டின் வளங்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் முறைப்பாடு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளோம்.

சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வளவு எச்சரிக்கை செய்தாலும் அது தொடர்பில் கவனத்திற்கொள்வதாக தெரியவில்லை. தற்போது நாட்டு மக்களுக்கு சூழலும் இல்லை உணவும் இல்லை என்ற நிலைமையே ஏற்பட்டுள்ளது. 

முதலில் புற்று நோய்க்கான இரசாயணங்கள் கலக்கப்பட்ட எண்ணெய் தொடர்பில் பேசப்பட்டது. பின்னர் பருப்பிலும் இவ்வாறு நஞ்சு கலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது , தற்போது அரிசியிலும் அந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் நாட்டு மக்கள் எவ்வாறு புத்தாண்டு தினத்திற்கான பண்டங்களை தயார் செய்துக் கொள்வார்கள்.

அரசாங்கத்தினால் நாட்டுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புகள் தொடர்பில் நாம் எமது கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம். இவர்களது ஊழல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி சிறந்தவொரு ஆட்சியை பெற்றுக் கொடுப்பதற்காக ஐ.தே.க. செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு தொடர்பில் மாவட்ட ரீதியிலும் ஆர்பாட்டங்களை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.

தவிசாளர் வஜிர அபேவர்தன

இதன்போது ஐ.தே.க.வின் தவிசாளர் வஜிர அபேவர்தன கூறியதாவது, நாட்டின் வனப்பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஐ.தே.க பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. 

அதற்கமைய ஐ.தே.க 2016 ஆம் ஆண்டு நாட்என் இயற்கை வழங்களின் பாதுகாப்பு தொடரப்பில் பிரான்ஸ் நாட்டுடனும் ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளது. அதற்கமைய எமது ஆட்சிகாலத்தில் வனங்களை பாதுகாப்பதாக நாம் உறுதியளித்திருந்ததுடன் , அதனை செயற்படுத்தியும் வந்திருந்தோம்.

இதேவேளை, மேலும் ஒரு விடயத்தை கூறிக் கொள்ள விரும்புகின்றேன். நாம் அனைவருமே நுரையீரல் இல்லாமல் உயிர்வாழ முடியாது , அதனால் மரம் ஒன்று வெட்டப்படுகின்றது என்றால் எமது நுரையீரல் எம்மிடமிருந்து அகற்றப்படுகின்றது என்று எண்ணுங்கள். அப்போது காடழிப்பு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துக் கொள்ள முடியும்.

உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம்

கட்சியின் உபத் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் இதன்போது கூறியதாவது , நாட்டின் சட்ட திட்டங்களுக்கமைவாகவும் , ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்புடன் செய்துக் கொண்ட ஒப்பந்தங்களின் படியும் , நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பில் நாம் கடமைப்பட்டுள்ளோம். 

இந்நிலையில் அரசாங்கம் இயற்கை வழங்களை அழிவுக்குட்படுத்தி வருவதுடன் மட்டுமன்றி , இயற்கைவள பாதுகாப்பு தொடர்பில் நாடு செய்துக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு புறம்பாகவும் செயற்பட்டு வருகின்றது.

ஐ.நா. சபையின் , புனேஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் எமது ஆட்சிகாலத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்ததுடன் , தேசிய உரிமைகள் தொடர்பிலும் காண்காணித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நாம் தேசிய உரிமைகளை சிறந்த முறையில் பாதுகாத்து வருவதாக எமக்கு பாராட்டும் தெரிவித்திருந்தார்.

தற்போது ஆட்சியிலுள்ள ராஜபக்ஷ அரசாங்கம் இயற்கைவள பாதுகாப்புக்கு புறம்பாக செயற்பட்டு வருவதுடன் , நாட்டை அழிவை நோக்கி கொண்டுச் செல்கின்றது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் , இந்த அரசாங்கத்தை வெளியேற்றி சிறந்தவொரு ஆட்சியை உருவாக்குவதற்காக அனைவரையும் எம்முடன் இணையுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57