ஈஸ்டர் தாக்குதலும் நீதியும்

Published By: Gayathri

06 Apr, 2021 | 05:18 PM
image

-கார்வண்ணன்

“ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு கொல்லப்பட்ட சஹ்ரான் ஹாசிம்தான் சூத்திரதாரி என்று கூறப்பட்டது: அவர் சூத்திரதாரி அல்ல, நௌபர் மௌலவிதான் பிரதான சூத்திரதாரி என்று இப்போது கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாகியும், இந்தச் சம்பவங்களின் சூத்திரதாரி யார் என்பதில் தொடங்கி, இதன் முழுமையான பின்னணி பற்றிய மர்மங்கள் துலங்கப்படவில்லை”

“ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பிலான ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள பௌத்த பீடங்கள் தயாராக இருக்கவில்லை. இது இந்த சம்பவங்களின் முழுமையான பின்னணியை கண்டறிந்து வேரறுப்பதற்கு உள்ள பிரதான தடையாக இருக்கிறது”

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இது போன்றதொரு ஈஸ்டர் நாளில் தான், இலங்கைத் தீவு நிலைகுலைந்து போனது.

அடுத்தடுத்து கொழும்பிலும், நீர்கொழும்பிலும், மட்டக்களப்பிலும் வெடித்த குண்டுகள், ஈஸ்டர் கொண்டாட்டங்களை மரண ஓலம் நிறைந்த நாளாக மாற்றியது.

போர் முடிந்து பத்து ஆண்டுகளாக எந்த குண்டுவெடிப்பு அவலங்களும் இன்றிக் காணப்பட்ட இலங்கைத் தீவை மாத்திரம், அந்த சம்பவங்கள் அதிர்ச்சியில் உறைய வைக்கவில்லை.

அதற்கும் அப்பால், உலகத்தையே - இலங்கைத் தீவை நோக்கி கவனிக்க வைத்திருந்தது அந்தத் தாக்குதல்கள்.

300 பேர் வரை கொல்லப்பட்டு பல நூறு பேர் காயமடைந்த அந்த சம்பவங்களின் நினைவுகளில் இருந்து பலரால் இன்னமும் மீள முடியாதிருக்கிறது.

இரண்டு ஆண்டுகளாகியும், இந்தச் சம்பவங்களின் சூத்திரதாரி யார் என்பதில் தொடங்கி, இதன் முழுமையான பின்னணி பற்றிய மர்மங்களும் துலங்கப்படவில்லை.

இலங்கைத் தீவு 30 ஆண்டுகால போரையும், பல கோரமான குண்டுவெடிப்புகளையும், தாக்குதல்களையும் சந்தித்த நாடு.

தனிநாடு கோரிய ஈழப்போருக்கு ஒரு காரணம் இருந்தது. ஒரு கொள்கையை முன்னிறுத்திய செயற்பாடு இருந்தது.

ஆனால், ஈஸ்டர் தாக்குதல்களில் அவ்வாறான எந்த நியாயப்பாடும் இல்லை. எந்தக் காரணமும் இல்லை.

கத்தோலிக்க தேவாலயங்கள் ஏன் இலக்கு வைக்கப்பட்டன என்ற கேள்விக்கு இன்று வரை தெளிவான பதில் கிடையாது.

கிறிஸ்ட்சேர்ச்சில் மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி என்று ஒரு காரணம் சொல்லப்பட்டது.

ஆயினும், கண்டி பெரஹெரவே இலக்கு வைக்கப்பட்டது. தாக்குதலை விரைவாக முடிக்க வேண்டிய அழுத்தங்கள் எழுந்ததால், தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டன என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.

ஆனாலும், சரியான காரணத்தை இன்னமும் கண்டறிய முடியவில்லை என்பதே உண்மை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-04-04#page-25

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22