மேலும் இரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் புட்டின்

Published By: Vishnu

06 Apr, 2021 | 12:47 PM
image

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மேலும் இரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வழிவகுக்கும் ஒரு சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இது அவரது பதவிக் காலத்தினை 2036 வரை நீடடிக்க வழிவகுக்கும்.

ஏற்கனவே இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் 68 வயதான ரஷ்ய ஜனாதிபதி புட்டின் திங்களன்று குறித்த சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது தனது நான்காவது ஜனாதிபதி பதவிக் காலத்தில் பணியாற்றி வரும் புட்டினின் பதவிக் காலம் 2024 இல் முடிவடையவுள்ளது.

திங்களன்று அறிவிக்கப்பட்ட புதிய சட்டம், அடுத்தடுத்த ஜனாதிபதி தேர்தல்களில் புட்டின் போட்டியிட விரும்பினால் அவருக்கு மேலும் ஈர் ஆறு ஆண்டு காலத்திற்கு ஜனாதிபதியாக பதவி வகிக்க அனுமதிக்கக்கூடும்.

இந் நிலையில் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாமா என்ற தீர்மானத்தை பின்னர் அறிவிப்பேன் என்று புட்டின் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08