ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும், ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரை  தொகுதி அமைப்பாளர்கள் பெயர் பட்டியலில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால நீக்கியுள்ளதாக ஜனாதிபதி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இன்று சதந்திர கட்சியின் 40 தொகுதி அமைப்பாளர்களின் நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த யாப்பா அபேவர்தன, காமினி லொக்குகே, சி.பி. ரத்னாயக்க,கெஹலிய ரம்புக்வெல்ல, மற்றும் பவித்ர வன்னியாராச்சி ஆகியோரே இவ்வாற நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.