விஜயுடன் இணையும் யோகி பாபு

Published By: Digital Desk 2

05 Apr, 2021 | 07:59 PM
image

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'தளபதி 65' படத்தில் முன்னணி கொமடி நடிகர் யோகிபாபு நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'தளபதி 65'. அதிகாரபூர்வமாக இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடிகளாக நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் மலையாள நடிகை அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் விஜயுடன் கொமடி நடிகர் யோகிபாபு இணைந்திருக்கிறார். 'மெர்சல்', 'சர்க்கார்', 'பிகில்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக யோகிபாபு விஜயுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

இதனிடையே யோகி பாபுவின் நடிப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விஜய் ரி வியில் நேரடியாக ஒளிபரப்பான 'மண்டேலா' படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் யோகிபாபு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை பெறுவார் என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35