ரஞ்சனின் ரிட் மனு நிராகரிப்பு

Published By: Vishnu

05 Apr, 2021 | 10:36 AM
image

தனது  பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுக்கும் வகையில் எழுத்தானை ஒன்றினை பிறப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரிட் மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை  நீதிபதி அர்ஜூன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரேயா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இந்த உத்தரவினை பிறப்பித்தது.

நீதிமன்றின் இந்த உத்தரவின் காரணமாக ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றில் தனது ஆசனத்தை இழப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளது.

தனது  பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்ப்ட்டுள்ள கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  கடந்த மார்ச் 2 ஆம் திகதி மனுத்தாக்கல் செய்துள்ளார். 

மேன் முறையீட்டு நீதிமன்றில்  அவர் இந்த ரிட் மனுவினை (எழுத்தாணை மனு) தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண ஊடாக தாக்கல் செய்துள்ள இம்மனுவில், பிரதிவாதிகளாக பாராளுமன்ற செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மனுவில்,  கடந்த ஜனவரி 12 ஆம் திகதி, நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக தனக்கு  4 வருட கடூழிய  சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் விதித்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

அவ்வாறான பின்னணியில், தனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதி இல்லை என சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக ஜனவரி 19 ஆம் திகதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், எனினும் பாராளுமன்ற செயலர் இதுவரை தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என  நம்பகரமான தகவல்கள் ஊடாக தான் அறிந்துகொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே தனது  பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு குறித்த ரிட் மனுவூடாக ரஞ்சன் ராமநாயக்க கோரியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09