சத்தீஸ்கர் தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

Published By: Vishnu

05 Apr, 2021 | 09:07 AM
image

சத்தீஸ்கரில் சனிக்கிழமை மாவோயிஸ்ட்டுகளுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த இந்திய பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையானது 22 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 30 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

சத்தீஸ்கரில் பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையில் உள்ள ஒரு காட்டிலே‍ இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மாவோயிஸ்ட்டுகளுடனான கடுமையான துப்பாக்கிச் சூட்டில் சனிக்கிழமை ஐந்து பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். 

ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல் போன வீரர்களில் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 

இதன் மூலம் மோதலில் மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சத்தீஸ்கரின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதேநேரம் மோதலுக்கு பின்னர் பாதுகாப்புப் பணியாளர்களிடமிருந்து மாவோயிஸ்ட்டுகளினால் இரண்டு டஜன் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் சம்பவ நடந்த இடத்திலிருந்து 15 மாவோயிஸ்ட்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன மற்றும் 20 மாவோயிஸ்ட்டுகள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் 22 பாதுகாப்பு படையினரின் உயிரிழப்புக்கு 

சத்தீஸ்கரில் நக்சல் பதுங்கியிருந்த 22 பாதுகாப்புப் படையினரின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25