ரஞ்சனின் ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா? - அறிவிப்பு இன்று

Published By: Vishnu

05 Apr, 2021 | 08:39 AM
image

தனது  பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுக்கும் வகையில் எழுத்தானை ஒன்றினை பிறப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவிக்கும்.

தனது  பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்ப்ட்டுள்ள கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  கடந்த மார்ச் 2 ஆம் திகதி மனுத்தாக்கல் செய்துள்ளார். 

மேன் முறையீட்டு நீதிமன்றில்  அவர் இந்த ரிட் மனுவினை (எழுத்தாணை மனு) தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண ஊடாக தாக்கல் செய்துள்ள இம்மனுவில், பிரதிவாதிகளாக பாராளுமன்ற செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மனுவில்,  கடந்த ஜனவரி 12 ஆம் திகதி, நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக தனக்கு  4 வருட கடூழிய  சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் விதித்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

அவ்வாறான பின்னணியில், தனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதி இல்லை என சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக ஜனவரி 19 ஆம் திகதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், எனினும் பாராளுமன்ற செயலர் இதுவரை தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என  நம்பகரமான தகவல்கள் ஊடாக தான் அறிந்துகொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே தனது  பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு குறித்த ரிட் மனுவூடாக ரஞ்சன் ராமநாயக்க கோரியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44