முத்­துக்­குமார் 1,500 பாடல்கள் எழுதி என்ன சம்­பா­தித்தான் என எனக்­குத்தான் தெரியும். சொந்த பந்­தங்­க­ளையும், நண்­பர்­க­ளையும் விட்­டுக்­கொ­டுக்­காத முத்­துக்­ கு­மா­ருக்கு பெரும்­பொ­ரு­ளாக அது சேர­வே­யில்லை. நினைத்­தாலே நெஞ்சு பத­று­கி­றது. முத்­துக்­குமார் மனை­வியின் குர­லுக்கு இங்கே என்ன பதில் இருக்­கி­றது?. நான் இருக்­கிறேன் என்­றுதான் என்னால் சொல்ல முடிந்­தது என்று இயக்­குநர் தங்­கப்­பச்சன் தெரி­வித்­துள்ளார். 

மறைந்த கவிஞர் நா.முத்­துக்­கு­மா­ருக்கு அஞ்­சலி செலுத்தும் வகையில் இயக்­குநர் தங்­கர்­பச்சான் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ளார்.

எனக்கு உண்­மையாய் இருந்த என் தம்பி தூங்கிவிட்டான். தலையில் இடி விழுந்­த­துபோல் என்று சொல்­வார்­களே, அது இது­தானா?. கல்­லூ­ரியில் படிக்­கிறான் எனச் ­சொல்லி முத்­துக்­கு­மாரை அவ­னது அப்­பாதான் 1993-ஆம் ஆண்டில் எனது “வெள்­ளை­மாடு” நூல் வெளி­யீட்டு விழாவில் அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

24 மணி நேரமும் எழுத்து, சிந்­தனை, புத்­தகம் என்றே அலைந்­தவன். என்னை உரி­மை­யுடன் கண்­டிப்­ப­வனும், இறு­தி­வரை எனக்கு உண்­மையாய் இருந்­த­வனும் தம்­பிதான்.

அவ­னிடம் நான் அன்பு காட்­டி­ய­தை­விட அதி­க­மாக திட்ட மட்­டுமே செய்­தி­ருக்­கிறேன். ஓய்­வற்ற அவ­னது உழைப்பு அவனை எங்கே கொண்டு போய்­விடும் என்­ப­தையும் எச்­ச­ரித்­தி­ருக்­கிறேன்.

அவன் உடல்­ந­லத்­தைப்­பற்றி என்­னை­விட கவ­லைப்­பட்­ட­வர்கள் யாரா­வது இருப்­பார்­களா எனத் தெரி­ய­வில்லை. தூங்­காத தூக்­கத்தை எல்லாம் சேர்த்து மொத்­த­மாக தூங்­கப்­போய்­விட்டான் என் முத்து.

1,500 பாடல்கள் எழுதி என்ன சம்­பா­தித்தான்?

அவ­னது பாடல்­களும், கவி­தை­களும், எழுத்­து­களும் மட்­டுமே நமக்கு தெரியும். எல்­லோரும் சேர்ந்து மொத்­த­மாக நேற்­றோடு புகழ்ந்து முடித்­து­விட்டோம். “அப்பா என்­று­கூட இன்னும் சொல்­ல­வ­ராத இந்த குழந்­தையை வைத்­துக்­கொண்டு இனி என்ன செய்­யப்­போ­கிறேன் அண்ணா” என என்னைப் பிடித்­துக்­கொண்டு கத­றிய முத்­துக்­குமார் மனை­வியின் குர­லுக்கு இங்கே என்ன பதில் இருக்­கி­றது?. நான் இருக்­கிறேன் என்­றுதான் என்னால் சொல்ல முடிந்­தது.

மீண்டும், முத்­துக்­கு­மா­ரைப்போல் அவ­னது இளந்­த­ளிர்­களும் இந்த போலி­யான உல­கத்தில் போராடி கரை­சேர வேண்டும். அவன் 1,500 பாடல்கள் எழுதி என்ன சம்­பா­தித்தான் என எனக்­குத்தான் தெரியும். சொந்த பந்­தங்­க­ளையும், நண்­பர்­க­ளையும் விட்­டுக்­கொ­டுக்­காத முத்­துக்­கு­மா­ருக்கு பெரும்­பொ­ரு­ளாக அது சேர­வே­யில்லை. நினைத்­தாலே நெஞ்சு பத­று­கி­றது. பண­மில்­லாமல் எதுவும் நடக்­காத இந்த நாட்டில் இந்த கவி­ஞனின் பிள்­ளை­களும் அவன் போன்ற பண்­புள்ள, சிறந்த மனி­தாக வாழ்ந்து காட்­டத்தான் வேண்டும்.

இவர்­கள்தான் தமி­ழர்கள், இதுதான் தமிழ்ப் பண்­பாடு. இனி முத்­துக்­கு­மாரின் குடும்­பத்தைக் காப்­பாற்ற யார் இருக்­கி­றார்கள்? தமிழ் சினி­மாவில் ஒரு படத்­திற்கு ஒரு பெரிய கதா­நா­ய­க­னுக்கு தரப்­ப­டு­கிற சம்­ப­ளத்தில் பதி­னைந்தில் ஒரு பகு­தி­யைத்தான் இந்த 15 ஆண்­டுகள் முழுக்க இரவு பக­லாக கண்­வி­ழித்து சம்­பா­தித்தான்.படைப்­பா­ளிகள் எப்­போ­துமே பாவப்­பட்­ட­வர்­கள் தான்.

எண்­ணற்ற எத்­த­னையோ படைப்­பா­ளி­களைக் கண்­டு­கொள்­ளாமல் இருந்­து­விட்டு சிறிதும் குற்­ற­வு­ணர்ச்சி இல்­லாமல் அவர்­க­ளுக்கு ஆண்­டுக்கு ஆண்டு நினை­வு­நாளில் மட்டும் பணம் கொடுத்து பத்­தி­ரி­கை­களில் விளம்­பரம் செய்துகொண்டு சிலைக்கு மாலை போட்டுக்கொண்டிருக்கிறோம். இவர்கள்தான் தமிழர்கள். இதுதான் தமிழ் பண்பாடு. முத்துக்குமாருக்கு இப்போது புரியும். தனக்கு உடல் முக்கியம், மனைவிக்கு கணவன் முக்கியம், தன் செல்வங்களுக்கு தந்தை முக்கியம், குடும்பத்துக்கு தலைவன் முக்கியம் என்று கூறியுள்ளார்.