கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யும் வர்த்தமானிக்கான அறிவுறுத்தல் அரச அச்சகத்திற்கு அனுப்பட்டது 

04 Apr, 2021 | 10:17 AM
image

(ஆர்.ராம்)

கூட்டு ஒப்பந்தத்தினை இரத்துச் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவுறுத்தல்கள் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்திளை இதுவரை காலமும் கூட்டு ஒப்பந்தமே தீர்மானித்து வந்திருந்தது. தற்போது வேதன நிர்ணய சபையின் விதிகளுக்கு அமைவாக அவர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தரப்பு அடுத்து வரும் காலத்தில் கூட்டு ஒப்பந்தம் அவசியமில்லை. அதனை இரத்துச் செய்ய வேண்டும் என்று எமக்கு எழுத்துமூலமான கோரிககையை விடுத்துள்ளது.

எனினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் செல்வதற்காக முப்பது நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் கூட்டு ஒப்பந்தத்தினை இரத்துச்செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் ஏடுக்கப்பட்டன.

அதன்பிராகரம், தற்போது, தொழில் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோhரின் அனுமதி பெறப்பட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவுத்தல்கள் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் அந்த அறிவித்தலை வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.

இதேவேளை, தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை திங்கட்கிழமை வெளியாகவுள்ளதாக கூறப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47