சூயஸ் கால்வாய் விவகாரம் ; எகிப்தின் முதல் பெண் கேப்டனுக்கு எதிராக போலி குற்றச்சாட்டு

Published By: Vishnu

04 Apr, 2021 | 08:07 AM
image

எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டனான மார்வா எல்செல்தாருக்கு எதிராக சூயஸ் கால்வாயூடான போக்குவரத்தினை தடுத்து நிறுத்தியதாக போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் உலகின் மிக மூலோபாய கப்பல் வழித்தடங்களில் ஒன்றான சூயல் கால்வாயின் குறுக்கே எவர் கிவன் என்ற கொள்கலன் கப்பல் பற்றிய தகவல்கள் வெளியானபோது 29 வயதான எல்செலெதார் மத்தியதரைக் கடல் துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவில் நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் கடமையில் இருந்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள எல்செலெதார்,

இந்த தகவலை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இந்த துறையில் நான் ஒரு வெற்றிகரமான பெண் என்பதால் அல்லது நான் எகிப்தியனாக இருப்பதால் இலக்கு வைக்கப்படலாம் என்று நான் உணர்ந்தேன் என்றார்.

உலகின் பெண்கள் கடற்படைகளில் 2 சதவீதத்தில் எல்செல்தார் உள்ளார்.

சூயஸ் கால்வாயில் பாரிய கொள்கலன் கப்பல் சிக்கியதன் விளைவாக உலகம் முழுவதும் வர்த்தகத்தை பாதித்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

கிட்டத்தட்ட ஒரு வாரமாக மீட்பு முயற்சிகள் நடந்து கொண்டிருந்ததால், 350 க்கும் மேற்பட்ட கப்பல்கள் சூயஸ் கால்வாயைக் கடக்கக் காத்திருந்தன. 

இந்த கப்பல் மார்ச் 29 அன்று விடுவிக்கப்பட்டது, ஏப்ரல் 3 ஆம் திகதி போக்குவரத்து தடை பெருமளவில் அகற்றப்பட்ட பின்னர் உலக வர்த்தகம் மீண்டும் தனது பாதையைத் தொடங்கியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10