போக்குவரத்து தொடர்பில் 8000 குற்றச்சாட்டுக்கள்

Published By: Digital Desk 3

03 Apr, 2021 | 04:15 PM
image

(செ.தேன்மொழி)

மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமைய , நான்காவது நாளாக இன்று  காலை ஆறு மணிவரையில் 8,957 குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

நாடளாவிய ரீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி ஏற்படும் இழப்புகளை தவிர்ப்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையானது இன்று சனிக்கிழமை வரை இடம்பெற்றிருந்தது.

அதற்கமைய இன்று  காலை வரை மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் 8,957 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்போது மது போதையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியதாக 264  பேரும் , மிக வேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டியதாக 85 பேரும் , அதிகூடிய வேகத்தில் மோட்டார் சைக்கிள்களை ஊட்டியதாக 80 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைக்கவசம் அணியாமல் இருந்ததாக 1298 பேரும் , வீதி ஒழுங்கு விதிகளை முறையாக பேணாமை தொடர்பில் 2002 பேரும் , அனுமதிபத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 875 பேரும் , வேறுவகையான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 4105 பேரும் , மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று பேர் பயணித்தமை தொடர்பில் 248 பேரும் இடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்புகளின் போது , போக்குவரத்துக்கு பொறுத்தமற்ற 295 மோட்டார் சைக்கிள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கும் நோக்கத்திலேயே ,  இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அதற்கமைய , பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22