4 நாடுகளை சிவப்புப் பட்டியலில் இணைத்தது இங்கிலாந்து - இது தான் காரணம் !

Published By: Digital Desk 3

03 Apr, 2021 | 11:10 AM
image

உலகிலுள்ள 4 நாடுகளை இங்கிலாந்து அரசாங்கம் பயண தடை பட்டியலில் சேர்த்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இவ்வாறு 4 நாடுகளை இங்கிலாந்து சிவப்புப் பட்டியலில் இணைத்துள்ளது.

இங்கிலாந்து புதிதாக பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும்  பங்காளதேஷ் ஆகிய நாடுகளை இவ்வாறு சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. 

இங்கிலாந்தில் இதுவரை 43 இலட்சத்து 64 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு இங்கிலாந்திற்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மேலும் 4 நாடுகளுக்கு தற்போது இங்கிலாந்து தடை விதித்துள்ளது.

இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டு மக்களை தவிர ஏனைய நாட்டினர் வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

குறித்த பயண தடையானது,  இம்மாதம் 9 ஆம் திகதி காலை 4 மணியில் இருந்து அமுலுக்குவருவதாக இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை அமுலுக்கு வந்த பின்னர் அந்த நாடுகளில் இருந்து வரும் இங்கிலாந்து மக்கள் 10 நாட்கள் கட்டாயம் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52