அரிசிக்கான நிர்ணய விலையில் மாற்றம் இல்லை - மஹிந்தானந்த

Published By: Digital Desk 4

02 Apr, 2021 | 10:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய  பொருட்களின் விலையை குறைக்க  எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  அத்தோடு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசியின் நிலையாண விலையில் இனியொருபோதும் மாற்றம் ஏற்படாது. 

மஹிந்தனாந்தவிடம் வாக்குமூலம் பதிவு | Virakesari.lk

சட்டவிரோதமான முறையில் அரிசியை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாவலப்பிடி பிரதேசத்தில்  இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 நாடு தழுவிய ரீதியில் உள்ள 2500  மொத்த கூட்டுறவு விற்பனை நிலையங்கள்,454 சதொச விற்பனை நிலையங்கள்,4000 முதல் தர விற்பனை நிலையங்கள் ஊடாக  நாடு அரிசி ஒரு கிலோ 97 ரூபாவிற்கும்,சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி ஒரு கிலோ 93 ரூபாவிற்கும் விற்பளை செய்யப்படுகின்றன.

அரிசி மாபியாக்களை  இல்லாதொழிக்க முறையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.  அரிசியின் விலை குறைக்கப்படாமலிருந்திருந்தால்  பண்டிகை காலத்தில் அரிசி ஒரு கிலோ கிராம் 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும். 

விவசாயிகள்;, வாடிக்கையாளர்களுக்கு இடையில் செயற்ட்ட அரிசி மாபியாக்களை இல்லாதொழித்துள்ளோம்.  அரிசியின் நிர்ணய விலை தொடர்ந்து  பேணப்படும்.

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது சதொச விற்பனை  நிலையங்கள் ஊடாக12 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய  1000 ரூபா பெறுமதியான நிவார பொதி விற்பனை செய்யப்படுகிறது. 

பண்டிகை காலத்திற்கும் பிறகும். இவ்வாறு  நிவாரண அடிப்படையில்  அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய  பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுறது.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் விவகாரத்தை கொண்டு எதிர்தரப்பினர் அரசாங்கத்தை பலவீனப்படத்த முயற்சிக்கிறார்கள். புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயன பதார்த்தம் கலக்கப்பட்ட இந்த எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு, பொது மக்கள் அதனை பயன்படுத்தியிருந்தால் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டலாம்.

இவ்விடயத்தில் அவ்வாறு ஏதும் இடம் பெறவில்லை.  பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்த தேங்காய் எண்ணெய் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் முன்னெக்கப்படுகின்றன. என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38