வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்குடன் மெட்ரொபொலிடன் நிறுவனம் அண்மையில் அனுராதபுரம் நகரில் புதிய வாடிக்கையாளர் சேவை நிலையம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளது.

 

இந்த திறப்பு விழாவில் அரசாங்கம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த புதிய கிளையில் நவீன IT உற்பத்திகள், கணினிகள், அச்சு இயந்திரங்கள், ஸ்கேனர்கள் மற்றும் copiers, பல்தீர்வு சானதங்கள் மற்றும் தொலைநகல் இயந்திரங்கள் போன்ற அலுவலக தன்னியக்க உற்பத்திகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும் வளிச் சீராக்கிகள், ஜெனரேட்டர்கள் மற்றும் லைட்டிங் முறைமைகள் போன்றன பொறியியல் உற்பத்தி தெரிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

‘ஒட்டுமொத்த வட மத்திய மாகாணத்திற்கும் சேவைகள் மற்றும் விற்பனை செயற்பாடுகளை வழங்கும் நோக்கில் இந்த அனுராதபுரக் கிளை திறக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக, நாம் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு IT உற்பத்தித் தெரிவுகளை வழங்கும் வகையில் காட்சியறையினுள்ளேயே சில்லறை கொள்வனவுகளுக்கான பிரிவையும் ஆரம்பித்துள்ளோம்” என மெட்ரொபொலிடன் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.பி.ஜி.நிலந்த தெரிவித்தார்.

இலங்கையின் முன்னணி தொழில்நுட்ப திட்டங்களுக்கான தொழில்நுட்பங்களை வழங்கி இலங்கையின் IT பொறியியல், அலுவலகத் தன்னியக்கம், தொடர்பாடல் வளர்ச்சியின் முன்னோடியாக மெட்ரொபொலிடன் திகழ்கிறது.

இந்த புதிய கிளையானது இத்தகைய தொழில்நுட்பத்தையும், தனிச்சிறப்பு மிக்க சேவைகளையும் வட மத்திய மாகாணத்திற்கு விஸ்தரிக்கவுள்ளதுடன், உலகிலுள்ள மேம்படுத்தப்பட்ட பொறியியல் மற்றும் IT உற்பத்திகளை பொதுரூபவ் தனியார் மற்றும் SME துறைகள் மற்றும் தனிநபர்களுக்கும் வழங்கவுள்ளது.