2021 ஆண்டுக்கான சிறந்த பறவை புகைப்பட கலைஞர் போட்டி; சுவாரஸ்யமான புகைப்படங்கள் இதோ...

Published By: Digital Desk 3

02 Apr, 2021 | 11:32 AM
image

புகைப்படம் பிடித்தல் என்பது ஓர் கலையாகும். ஒரு சில புகைப்பட கலைஞர்கள் புகைப்படங்கள் பிடிப்பதற்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்து செயற்படுகின்றனர். 

காடுகள், மலைகள், பாரிய பள்ளத்தாக்குகள் என எந்த இடத்தையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. 

அதேபோல் அவர்களின் காமராவிற்குள் சிக்கிக்கொள்ளும் புகைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதோடு அந்த ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படமாக தெரிவு செய்யப்படுவதுமுண்டு. 

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த பறவை புகைப்பட கலைஞர் போட்டிக்காக பல்வேறு புகைப்படங்களை பல்வேறு கலைஞர்கள் அனுப்பி வைத்துள்ளனர். 

அதாவது 22,000 கலைஞர்கள் தாங்கள் பிடித்த புகைப்படங்களை குறித்த போட்டிக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

அந்த வகையில், பிரித்தானியாவை சேர்ந்த ப்ரைன் மெதீவ்ஸ் என்ற இளம் கலைஞர் பிடித்துள்ள புகைப்படமானது மிகவும் சுவாரஷ்யமாக உள்ளது. 

அவர், ஐரோப்பியன் ஷாக் என்ற பறவை தனது தாயிடம் இருந்து உணவை பெற்றுக்கொள்வதற்காக தாயின் வாயில் தனது தலையை  உட்செலுத்தும் புகைப்படத்தை எடுத்துள்ளார். 

அதேபோல் ஒரு கடல் கழுகு, நரியை தனது இறக்கையால் தாக்கும் புகைப்படத்தை ஜப்பானை சேர்ந்த பஹாட் அலனேசி என்பவர் எடுத்துள்ளார். 

பறவை  ஒன்று தேரையை தனது இரையாக உண்ணும் காட்சியை தென் ஆபிரிக்காவைச்  சேர்ந்த டேனியல் ஜாங் என்ற கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார். 

ஜப்பானின் ஹொக்கைடோ குஷாரோ ஏரியின் கரையில் உள்ள மரத்தில் தொங்கும் ஒரு பனிக்கட்டியில்  இருந்து நீரை பருக வரும் புஷிட் என்ற பறவையை ஐரேன் வேரிங் என்ற கலைஞர் புகைப்படமெடுத்துள்ளார். 

அதேபோல் இந்தியாவில் ஓர் ஈர நிலப்பகுதியில் கருப்பு நிற வால் கொண்ட கோட்விட்ஸ் என்ற இரு பறவைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடும் காட்சியை அனுபோம் சக்ரபோதி என்பவர் புகைபடமெடுத்துள்ளார். 

இவ்வாறான பல்வேறு பறவைகளின் பன்முகத்தன்மையினை பல்வேறு இளம் கலைஞர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right