தேர்தல் களத்தில் மீண்டும் “ஜெயலலிதா- சசிகலா”

Published By: Gayathri

01 Apr, 2021 | 05:20 PM
image

எம்.காசிநாதன்

“ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலா மீது எனக்கு சந்தேகமே இல்லை”

“சசிகலா மீது எனக்கு முதலில் இருந்தே எந்த வருத்தமும் இல்லை”

“ஜெயலலிதாவுடன் இருந்தபோது அவருக்கு தேவையானதையெல்லாம் செய்தார் என்ற நன்மதிப்பு அவர் மீது எனக்கு இருக்கிறது” என்று அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்  பேட்டி அளித்திருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

“ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்” என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் களத்தில் கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பேட்டி இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு மட்டுமின்றி, அ.தி.மு.க.வில் உள்ள அவரது ஆதரவாளர்களையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.

“ஜெயலலிதா மரணத்திற்கு நீதிவிசாரணை கோரியவரும், சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அரசும், கட்சியும் விடுவிக்கப்பட்ட பிறகே எங்கள் அணியை அ.தி.மு.க.வுடன் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றவரும் ஓ. பன்னீர்செல்வம் தான். 

அதற்காக ஜெயலலிதா சமாதி முன்பே “தர்மயுத்தம்” நடத்தி அ.தி.மு.க.விற்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியவர்.

பிறகு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதால் அ.தி.மு.க.வுடன் இணைந்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினாலும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இதனால் “ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்” இணைப்பு நடப்பதற்கு முன்பாக முதலில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஒரு விசாரணை ஆணையகத்தை அமைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அந்த ஆணையகம் தற்போது உச்சநீதிமன்றம் விதித்த தடையின் காரணமாக விசாரணையை மேற்கொள்ள முடியாமல் முடங்கியுள்ளது என்பது வேறு தனிக்கதை.

இது போன்ற சூழலில்தான் “உச்சநீதிமன்ற தடையை ஏன் நீக்கவில்லை”

“விசாரணை ஆணையகம் அழைப்பாணையுடன் அனுப்பியும் ஏன் ஓ.பி.எஸ் ஆஜராகவில்லை” என்றும் தி.மு.க. சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட முதலில் “கருணாநிதி தொடர்ந்த வழக்கால்தான் மன உளைச்சல் அம்மாவிற்கு ஏற்பட்டது.

அதனால் தான் ஜெயலலிதா மறைந்தார். அதற்கு கருணாநிதி, ஸ்டாலின்தான் காரணம்” என்று முதலமைச்சர் பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-28#page-10

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04