மார்ச் மாதத்தில் மாத்திரம் 25 இலங்கை மீனவர்கள் இந்திய தரப்பால் கைது

01 Apr, 2021 | 02:01 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரால் அந்நாட்டு கடற்பரப்பில் மார்ச் மாதத்தில் மாத்திரம் 25 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு , 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த 4 படகுகளிலும் இருந்து ஹெரோயின் மற்றும் துப்பாக்கிகள் என்பனவும் இந்திய  கரையோரப் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண  மேலும் தெரிவிக்கையில் ,

இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரால் மார்ச் 5 ஆம் திகதி மீன்பிடிப்படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளதோடு , அதிலிருந்த 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இப் படகு சிலாபத்திலிருந்து சென்றதாகும். அத்தோடு இந்த படகிலிருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் காணப்பட்டதாகவும் , குறித்த படகை இந்திய கரையோரப்  பாதுகாப்பு பிரிவு சுற்றி வளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது , அதிலிருந்த ஹெரோயின் தொகை கடலில் வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரால் மார்ச் 15 ஆம் திகதி மீண்டும் 3 இலங்கை மீன் பிடி படகுகளும் அவற்றிலிருந்த 19 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இம் மூன்றில் ஒரு படகிலிருந்து 350 கிலோ கிராம் ஹெரோயின் தொகையும் , ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் ஐந்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த படகுகள் தங்காலை மற்றும் இலங்கையின் தென்  பகுதிகளிலிருந்து சென்றவையாகும்.

அதற்கமைய குறித்த 4 படகுகளிலிருந்தும் 25 மீனவர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு , சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30