ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கடந்த காலத்தை மீட்டிப்பார்க்க வேண்டும் - திலும் அமுனுகம

Published By: Digital Desk 3

01 Apr, 2021 | 11:17 AM
image

(இராஜதுரை ஹஷான்)

இடம் பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் பொதுஜன பெரமுன நாடு தழுவிய ரீதியில் வெற்றிப்பெறுவதற்கான திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி  தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் பொதுஜன பெரமுனவிற்கு  எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கடந்த காலத்தை மீட்டிப்பார்க்க வேண்டும் என  போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பொல்காவெல பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலவச போக்குவரத்து சேவையினை பயனுடையதாக மாற்றியமைக்கும் திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன.  இலங்கை  போக்குவரத்து சேவையில் 5 வருட காலத்திற்கும் அதிகமாக ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுபவர்களுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சாரதிகள்சேவை ஒழுங்குமுறையற்றதாக காணப்படுகிறது. சாரதி ஆலோசனை பதவி வெற்றிடம்  தொடர்பில் இதுவரை காலமும் கவனம் செலுத்தப்படவில்லை.  ஆகவே சாரதி ஆலோசனை பதவிக்கான ஆட்சேர்ப்பு பரீட்சையை இம்மாதம் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. போக்குவரத்து  சேவையினை பாதுகாப்பானதாகவும், பயனுடையதபாகவும் மாற்றியமைப்பது பிரதான இலக்காகும்.

மாகாண சபை தேர்தல் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன நாடு தழுவிய ரீதியில் வெற்றிப் பெறுவதற்கான திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டுள்ளன. அனைத்து மாகாணங்களிலும் பொதுஜன பெரமுன வெற்றிப்பெறும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி  மாகாண சபைதேர்தலில் தனித்து போட்டியிடுவதாக குறிப்பிடுகிறது.  ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி ஊடாக ஒன்றினைந்து பயணிக்க எதிர்பார்க்கிறோம். சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுவதால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டதால் பொதுத்தேர்தலில் 13 ஆசனங்களை பெற்றுக் கொண்டது. ஆகவே கிடைக்கப் பெற்றமக்களாணை குறித்து சுதந்திர கட்சி நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22