படை வீரர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதியால் கையளிப்பு

Published By: Priyatharshan

16 Aug, 2016 | 05:20 PM
image

யுத்தத்தின்போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்களுக்கும் யுத்த களத்தில் காயமடைந்த படைவீரர்களுக்குமாக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பிற்பகல் படைவீரர்களிடம் கையளிக்கப்பட்டது.

வீடுகளை கையளிக்கும் அடையாள நிகழ்வாக ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வீட்டு உரிமையாளர்களிடம் வீடுகளின் திறப்புகளை ஜனாதிபதி கையளித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க படைவீரர்களுக்காக சகல வசதிகளும் கொண்ட வீடுகளை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 35 வீடுகள் படைவீரர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளின் திறப்புகளை இவ்வாறு இன்று ஜனாதிபதி படைவீரர்களிடமும் உயிர் நீத்த படைவீரர்களின் உறவினர்களிடமும் கையளித்தார்.

வீட்டு உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்கால தேவைகள் என்பன கருத்திற்கொள்ளப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளுக்கான உடல் உழைப்பு, குறித்த வீட்டு உரிமையாளரான படைவீரர் உள்ளடங்கும் படையணியினரினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒட்டுமொத்த செலவு தற்போது சேவையில் உள்ள படைவீரர்களினால் ரணவிரு வீடமைப்பு நிதியத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்தும் படையணியின் நிதியத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இராணுவத் தளபதி லெப்டினன் கிரிஷாந்த த சில்வா உள்ளிட்ட படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17