6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையும்

Published By: Vishnu

31 Mar, 2021 | 07:16 AM
image

சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் இன்று இலங்கை வந்தடையவுள்ளது.

அதன்படி ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இவை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.

சீனாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்படும் இந்த தடுப்பூசி பங்குகளை சுகாதார அமைச்சகம் பெற்றுக் கொள்ளும்.

சீனாவில் தயாரிக்கப்படும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் முதற்கட்டமாக இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்படும்.

 உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னரே இலங்கை பிரஜைகளுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சீனாவிலுள்ள உயர்கல்வியை தொடர்கின்ற இலங்கை மாணவர்களுக்கு சினோபார்ம் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றும் இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இலங்கை இதுவரை 1,864,000 ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி அளவுகளை பெற்றுள்ளது. 

அவற்றுள் 1,264,000 டோஸ்கள் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். அதேநேரம் உலக சுகாதார அமைப்பு கோவாக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக 264,000 அளவுகளை வழங்கியிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08