மாறவேண்டிய கொள்கை

Published By: Gayathri

30 Mar, 2021 | 05:11 PM
image

எம்.எஸ்.தீன்

“ஐ.நா மனித உரிமைகள்; பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் கொண்டு வரப்பட்டபோது ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் முக்கிஸ்தர்கள் முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் செய்து ஆதரவைப் பெற்றுக் கொடுத்தார்கள். அத்தகைய முயற்சிகளை தற்போது ஆட்சியிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகளால் முன்னெடுக்க முடியவில்லை”

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியாவின் தலைமையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இப்பிரேரணையை எப்படியும் தோற்கடிப்போம், இலங்கைக்கு பல நாடுகளின் ஆதரவுள்ளதென்று அரசாங்கத்தினர் தெரிவித்துக் கொண்டாலும், அரசாங்கத்தின் இராஜதந்திரங்கள் தோல்வியடைந்துள்ளன. 

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனால் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கண்காணிப்பு இலங்கையின் மீது ஆழமாக இருக்கப் போகின்றது. 

இலங்கை தொடர்பாக ஆராய்வதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் சட்ட ஆலோசகர்கள், புலனாய்வாளர்கள் உட்பட 12 பேரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

தோல்விக்கு காரணம்

இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை முன் வைக்கப்படவுள்ள வேளையில், அதனை எதிர்கொள்வதற்கு சர்வதேச நாடுகளை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். 

ஆனால், அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதில் ஒரு தொய்வு நிலை காணப்பட்டது. இதற்கு சர்வதேச தொடர்புகளுடன் அனுபவத்தில் குறைந்தவர்களே இராஜதந்திரத்தை மேற்கொண்டதே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றன. 

அதேவேளை, சர்வதேச நாடுகளின் ஆதரைவப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடவடிக்கைகளில் தடைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளும், கருத்துக்களும் ஆளுந்தரப்பினரால் நாளாந்தம் முன் வைக்கப்பட்டன. 

ஆட்சியாளர்கள், உள்நாட்டில் பௌத்த சிங்கள மக்களை சந்தோசப்படுத்தும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். 

இந்த முறையாது கொண்டுவரப்பட்ட பிரேரணையில், இறுதி யுத்தம் தொடர்பானவற்றை விடவும், தற்போதைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இராணுவ மயமாக்கல் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்தன்மையின் பலவீனம் உள்ளிட்ட காரணிகள் தொடர்பிலேயே அதிகளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதலால், அரசாங்கத்தின் அமைச்சர்கள் இதனைப் புரிந்து கொள்ளாது, உள்நாட்டில் பெரும்பான்மையின மக்களை சூடாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வதற்காக சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  சர்வதேச நாடுகளுக்கு சவால்விடுக்கும் வகையிலேயேயும் அந்தக் கருத்துக்கள் அமைந்திருந்தன. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-28#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18