ஹொங் கொங்கில் அண்மையில் இடம்பெற்ற World Luxury Hotel Awards 2015 (WLHA) விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த “Luxury Mountain Resort;” எனும் விருதை இலங்கையின் 98 Acres Resort & Spa பெற்றுக் கொண்டது.

இலங்கையின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலமைந்த 98 Acres Resort & Spa உலகின் சிறந்த luxury mountain resort எனும் பெருமைக்குரிய விருதை பெற்றுக் கொண்டுள்ளது. குறிப்பாக WLHA 2015 இல் இலங்கையிலிருந்து சர்வதேச விருதுக்கு தெரிவாகியிருந்த இரு வெற்றியாளர்களில் ஒன்றாக இந்த ஹோட்டல் உள்ளது.

வருடாந்தம் முன்னெடுக்கப்படும், World Luxury Hotel விருதுகள் நிகழ்வின் மூலமாக, உலகளாவிய ரீதியில் காணப்படும் சிறந்த சொகுசு ஹோட்டல்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. 2006 இல் ஸ்தாபிக்கப்பட்ட World Luxury Hotel விருதுகள் வழங்கும் வைபவம், சாதாரண தரம் மற்றும் சேவை ஆகியவற்றுக்கு அப்பால் சென்று, சிறந்த சேவைத்தரங்களை பேணும் ஹோட்டல்களை கௌரவித்துக் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது,

இந்நிகழ்வில் U.H.E Group இன் (U.H.E Group இன் அங்கத்துவ நிறுவனமாக 98 Acres Resort &Spa அமைந்துள்ளது) தலைவர் ஏ.பி.டி. அபேரட்ன உரையாற்றுகையில்,

“இந்த பெருமைக்குரிய விருதை பெற்றுக் கொண்டமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். World Luxury Hotel விருதுகள் என்பது, உலகளாவிய ரீதியில் சிறந்த ஹோட்டல் சேவைகளை வழங்குவோருக்கு வழங்கப்படுகிறது.

எமது விருந்தினர்களுக்கு நாம் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்குகிறோம் என்பதை இந்த விருது உறுதி செய்துள்ளது. சிறந்த ஹோட்டல்களின் உயர்ந்த நிலையை நாம் எய்தியுள்ளோம்” என்றார். 

“இந்த பெருமைக்குரிய விருதுக்கு தெரிவு செய்யப்படும் ஹோட்டல்கள், அவற்றுக்கு தமது வாக்குகளை வழங்கும் சர்வதேச பயண ஏற்பாட்டாளர்கள், பயண முகவர்கள் மற்றும் ஹோட்டல் விருந்தினர்கள் ஆகியவற்றுக்கமைய தெரிவு செய்யப்பட்டிருந்தது. இவற்றின் மூலமாக எமது ஊழியர்களின் மூலமாக வழங்கப்படும் சேவைத்தரம் மேலும் உறுதியாகியுள்ளது” என அபேரட்ன மேலும் குறிப்பிட்டார்.

“நீங்கள் இலகுவாக எந்தவொரு பகுதியையும் வடிவமைத்து உருவாக்க முடியும். ஆனாலும், அதை நிஜமாக்குவதற்கு உங்களிடம் சரியானவர்கள் காணப்பட வேண்டும்” என அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

2015 இல், 145 நாடுகளைச் சேர்ந்த 1000 ஹோட்டல்கள் இந்த விருதுகள் வழங்கலுக்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தன. “குழுமத்தின் பொது முகாமையாளர் இன்திகாப் அலாம் மற்றும் அவரின் செயலணியினர் வழங்கி வரும் அர்ப்பணிப்பான செயற்பாடு மற்றும் ஈடுபாடு போன்றன மிகவும் திருப்திகரமானதாக அமைந்துள்ளது. 

அவர்களின் முயற்சிகரமான செயற்பாடுகள் மூலமாக, எம்மால் இந்த சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனூடாக எமது விருந்தினர்களுக்கு சிறந்த சேவைகளையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க முடிகிறது” என மேலும் குறிப்பிட்டார். 

“98 acres என்பதற்கு மேலாக, Secret Kandy, Yala மற்றும் Ella போன்ற ஹோட்டல்கள் சொகுசான பொட்டிக் ஹோட்டல்களாக இயங்கி வருகின்றன. TripAdvisor இல் இந்த ஹோட்டல்களும் அந்நகரங்களில் உயர்ந்த ஸ்தானங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன. (கண்டியில் 1ம் இடம், எல்லவில் 2ம் இடம்)” என அபேரத்ன மேலும் தெரிவித்தார்.

முன்னர் ஏசியா பசுபிக் தொழில்முயற்சியாண்மை விருது 2014 இல் 98 Acres விருதை தனதாக்கியிருந்தது. 2014 இல் இலங்கையில் சிறந்த 25 சொகுசு ஹோட்டல்களில் 17 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது. 2014 / 2015 காலப்பகுதியில் 1ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.

விருந்தினர்களுக்கு சிறந்த இலங்கையின் அனுபவத்தை வழங்குவதை தொடரும் 98 Acres Resort வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் சென்று, தொடர்ந்து சேவைகளை வழங்கும். 98 Acres Resort & Spa – என்பது, எழில்மிகுந்த எல்ல பகுதியில் அமைந்துள்ளது. சேவைச் சிறப்பு, பாரம்பரிய இடம்சார் பெறுமதி ஆகியவற்றை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. பெருமளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினால் அதிகம் நாடப்படும் இந்த விருந்தோம்பல் பகுதி, U.H.E Group இன் அங்கத்துவ நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. 

UHE குரூப் பிரைவட் லிமிட்டெட் பற்றி 

இலங்கையை தளமாகக் கொண்டு செயற்படும் U.H.E குரூப், ஏ.பி.டி. அபேரத்ன (தலைவர்) இனால் ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிறுவனத்தினால் பன்முகப்படுத்தப்பட்ட சேவைகள் மற்றும் பொருட்கள் போன்றன உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

1971 இல் தேயிலை உற்பத்தியுடன் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த இந்த குரூப், நாடு முழுவதிலும் மூன்று தேயிலை பெருந்தோட்டங்களை தன்வசம் கொண்டுள்ளது. ஊவஹல்பேவத்த டீ ஃபெக்டரி (பிரைவட்), ஊவா கிறீன்லன்ட்ஸ் எஸ்டேட் பிரைவட் லிமிட்டெட் மற்றும் ஊவஹல்பே எஸ்டேட் பிளான்டேஷன்ஸ் பிரைவட் லிமிட்டெட் போன்றன இந்த குரூப் கீழ் காணப்படும் துணை நிறுவனங்களாகும். குரூப் தனது வர்த்தக செயற்பாடுகளை ஏனைய துறைகளுக்கும் விஸ்தரித்திருந்தது. 

U.H.E  லெஷர் பிரைவட் லிமிட்டெட் கீழ் இலங்கையில் வெவ்வெறு பகுதிகளில் விருதுகளை வென்ற சொத்துக்களை பேணி வருகிறது. எல்ல பகுதியில் 98 Acres Resort and Spa மற்றும் யால, கண்டி மற்றும் எல்ல ஆகிய பகுதிகளில் ‘The Secret Hotels’ தொடரையும் பேணி வருகிறது.