இராஜதந்திரத் தோல்வி

30 Mar, 2021 | 11:04 AM
image

-என்.கண்ணன்

“இலங்கைக்கு ஆதரவளித்த 11 நாடுகளும், நடுநிலை வகித்த 14 நாடுகளையும் சேர்த்து, 25 நாடுகள் தமது தரப்பில் இருப்பதாக காட்டிக் உரிமை கோருவது நகைப்புக்கிடமானது”

“47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், குறைந்தபட்சம் 24 நாடுகளின் ஆதரவு கிடைத்தால் தான், அது பெரும்பான்மை. அந்த ஆதரவு நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்துக்குக் கிடைக்கவில்லை. அதற்காக தீர்மானம் சட்டவலுவற்றது என்றில்லை”

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம், 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருப்பது, கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு பெரியதொரு இராஜதந்திர பின்னடைவு என்று குறிப்பிட்டிருந்தது நியூயோர்க் ரைம்ஸ்.

ஆனால், இலங்கை அரசாங்கமோ, பேரவையின் பெரும்பான்மை நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்காத நிலையில், தங்களுக்கே வெற்றி என்று கூறிய அதேவேளை, இந்த நாள் ஒரு துயரமான நாள் என்றும் கூறியது.

அதாவது, ஜெனிவா தீர்மான விடயத்தை கையாளுவதில், அதன் பின்னடைவுகளை எதிர்கொள்வதில் அரசாங்கத்துக்குள் குழப்பம் இருப்பதையே இது காட்டியது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றில், 22 நாடுகள் மட்டும் தான் இந்த முறை தீர்மானத்தை ஆதரித்திருந்தன.

2012 இல் 24 நாடுகளும், 2013இல் 25 நாடுகளும், 2014இல் 23 நாடுகளும் இலங்கைக்கு எதிராக – அதாவது இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவு அளித்திருந்தன.

இந்தமுறை, அந்த எண்ணிக்கை குறைந்து 22 நாடுகள் தான் தீர்மானத்தை ஆதரித்திருக்கின்றன. 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட பேரவையில், குறைந்தபட்சம் 24 நாடுகளின் ஆதரவு கிடைத்தால் தான், அது பெரும்பான்மை. அந்த ஆதரவு தீர்மானத்துக்குக் கிடைக்கவில்லை.

அதற்காக இந்த தீர்மானம் சட்டவலுவற்றது என்றில்லை. நடுநிலை வகித்த 14 நாடுகளும், தங்களுக்கே ஆதரவளித்தன என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறியிருக்கிறார்.

அந்த நாடுகளுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கு ஆதரவளித்த 11 நாடுகளும், நடுநிலை வகித்த 14 நாடுகளையும் சேர்த்து, 25 நாடுகள் தமது தரப்பில் இருப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.

வாக்களிப்பில் நடுநிலை வகித்த நாடுகளில் இந்தியாவும், ஜப்பானும் முக்கியமானவை. இந்த இரண்டு நாடுகளும், இலங்கையுடன் நெருங்கிய உறவுகளையும் நீண்டகால நட்புறவையும் கொண்டவை.

அதுபோன்று, இந்தோனேசியா, பஹ்ரெய்ன், போன்ற இஸ்லாமிய நாடுகளும் கூட, நடுநிலை வகித்திருக்கின்றன. நடுநிலை வகித்த நாடுகள், தீர்மானத்துடன் இணங்கிப் போனவை என்று கூறமுடியாது. அவ்வாறு இணங்கியிருந்தால், ஆதரவாக வாக்களித்திருக்கும்.

அதுபோன்றே, தீர்மானத்தை முழுமையாக நிராகரிப்பதாக- அல்லது இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இருந்தால், அந்த நாடுகள், எதிர்த்து வாக்களித்திருக்கும்.

இந்த இரண்டுக்கும் நடுவேயிருந்த நாடுகள் தான், மதில்மேல் பூனையாக அமர்ந்து கொண்டன. இந்த நாடுகளின் இந்த முடிவுக்கு பல காரணங்கள் உள்ளன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-28#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13