நடுநிலைமை வகிப்பதென்பது ஆதரவா- எதிர்ப்பா ?

30 Mar, 2021 | 10:46 AM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

ஐ.நா.தீர்மானம் குறித்த தெளிவுகள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எந்தளவுக்கு சென்றடைந்திருந்தாலும் இதில் இலங்கை தோற்றதுக்கு காரணம் நாட்டின் சிறுபான்மை மக்களே என்ற பேரினவாத பிரசாரங்கள் உருவாகாது இருப்பது அவசியம். ஏனெனில் இனி இலங்கை வாழ் சிறுபான்மை சமூகங்களின் மீதான சர்வதேசத்தின் கண்காணிப்பு இரட்டிப்பாகும்

நடுநிலைமை என்பதற்கு 2500 வருடங்களுக்கு முன்பு திருவள்ளுவர் கூறிய விளக்கத்தை தமிழ் கூறும் நல்லுலகம் இது வரை ஏற்று வந்துள்ளது.

திருக்குறளுக்கு விளக்கவுரைகள் எழுதிய பல அறிஞர்கள் சொற்களை மாற்றியிருக்கலாம் ஆனால் பொருளும் உள்ளடக்கமும் என்றுமே மாறியதில்லை. அதையே பல நூறு வருடங்களாக எமது முன்னோர் மேற்கோள் காட்டி புதிய படைப்புக்களை உருவாக்கியுள்ளனர்.

தமது சந்ததியினருக்கு அதை கடத்தியுள்ளனர். அதன் படி எந்த பக்கமும் சாராமல் இருப்பதையே நடுவுநிலைமை என்கிறோம். ஆனால் காலமாற்றத்தில் இந்த நடுநிலைமை என்பது அரசியலில், தொழிற்றுறைகளில் ,ஆன்மிகத்தில் ஏன் யுத்தங்களில் கூட வேறு அர்த்தத்தை போதிப்பதாக மாறி விட்டது.

அதுவும் ஆசியாவின் ஆச்சரியமான இலங்கையில் இதன் அர்த்தத்தை மாற்றி கூறியிருக்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்திருந்தன.

அதற்கு எதிராக 11 நாடுகள் வாக்களித்திருந்த அதேவேளை 14 நாடுகள் நடுநிலை வகித்திருந்தன. எனினும் இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் இலங்கைக்கு எதிராக மேற்குலகத்தினரால் பெரும்பான்மை ஆதரவை திரட்ட முடியவில்லை என்றும் 25 நாடுகள் அதை நிராகரித்திருப்பதாகவும் கூறியிருக்கின்றார். இலங்கைக்கு ஆதரவாக நின்று பிரேரணைக்கு எதிராக வாக்களித்த 11 நாடுகளுடன் நடுநிலை வகித்த 14 நாடுகளையும் சேர்த்து அவர் அவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

ஆகவே நடுநிலை வகிப்பதென்பது இலங்கை அரசாங்கத்தின் கருத்துப்படி எதிராகவோ ஆதரவாகவோ செயற்படுவதா என்ற கேள்வி எழுவது நியாயமானது தானே? இவ்வாறெல்லாம் விளக்கம் கூறப்படுவதால் தான் இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாக மாறப்போகின்றதோ தெரியவில்லை.

நடுநிலை வகித்த ஆசிய நாடுகளில் இந்தியாவும் ஜப்பானும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதிலும் இலங்கையின் அரசியல்,பொருளாதார, கலாசார விவகாரங்களில் மிக நீண்ட வரலாற்றை கொண்ட நாடாக இந்தியா விளங்குகின்றது.

ஆசிய பிராந்தியத்தில், ஜெனிவா விவகாரம் தொடர்பில் இலங்கைக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு வழங்கும் நாடுகள் என்ற எதிர்ப்பார்ப்பில், அனைவரினதும் பார்வை இந்தியாவின் மீதே இருந்தது. ஜெனிவா பிரேரணைக்கு முன்பதாகவே கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய விவகாரம் மற்றும் அதன் பின்னர் இந்தியா வலியுறுத்திய மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் ஆகியவற்றில் பின்னடிப்பு செய்ததால் ஜெனிவா பிரேரணை வரை மெளனம் காத்தது இந்தியா.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-28#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54