அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இயக்குவது பா.ஜ.க. மற்றும் ஆர். எஸ். எஸ். -  ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Published By: Digital Desk 2

29 Mar, 2021 | 02:27 PM
image

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இயக்குவது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ். எஸ். தான் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார்.

சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, கூட்டணியின் தலைவர்கள் பங்குபற்றும் மாபெரும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பங்குபற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி பேசியதாவது, 

‘இந்தியா தான் தமிழகம். தமிழகம் தான் இந்தியா. இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் இணைந்ததாகும். மணங்கள், கலாச்சாரம், பண்பாட்டின் ஒருங்கிணைப்பாக இந்தியா திகழ்கிறது.

எந்த ஒரு சிந்தனையும் மற்றதை விட உயர்ந்தது தாழ்ந்தது கிடையாது. தமிழகத்தில் தமிழ் பண்பாடு, கலாச்சாரம் ,மொழி மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. அது ஒட்டுமொத்த இந்தியா மீதான தாக்குதலாக உள்ளது.

தமிழர்களை மதிக்காமல் இந்தியா இருந்துவிட முடியாது. மேற்குவங்கத்தில் உள்ளவர்களை மதிக்காமல் இந்தியா இருந்துவிட முடியாது. 

பா.ஜ.க. வின் ஒற்றை சிந்தனைக்குள் இந்தியாவை தள்ள முடியாது. அனைத்து மாநில மொழிகளும், கலாச்சாரங்களும், சித்தாந்தங்களும் சேர்ந்து தான் இந்தியாவை உருவாக்கியுள்ளன. ஒற்றை சிந்தனையை ஏற்க முடியாது என்பதால் தான் இங்கு வந்துள்ளேன்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகையில் கொரோனாவை தடுக்க அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற கருத்தை சொன்னார்.

முகக் கவசம் அணிவது கொரோனாவை தடுக்க மிகவும் பாதுகாப்பானதாகும். தற்போது எங்கு பார்த்தாலும் முகக்கவசம் அணிவதை காணமுடிகிறது.

முகக் கவசத்துக்கு பின்னே என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அது போல தான் தமிழகத்தில் உண்மையான அ.தி.மு.க மறைந்து விட்டது. இப்போது அ.தி.மு.க அணிந்து கொண்டிருக்கும் முகக் கவசத்தின் பின்னால் ஆர்.எஸ்.எஸ் , பா.ஜ.க. ஆகியவை ஒளிந்து கொண்டுள்ளன. 

அந்த அமைப்புகளால் இயக்கப்படும் கட்சியாக அ.தி.மு.க மாறிவிட்டது. இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தமிழர் கூட பிரதமர் மோடி, அமித்ஷா , ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரிடம் தலைகுனிந்து நிற்க விரும்பவில்லை. ஆனால் தமிழக முதல்வர் தலைகுனிந்து நிற்கிறார்.

ஏனெனில் பிரதமர் மோடியிடம் அமலாக்கப்பிரிவு சி.பி.ஐ போன்ற புலனாய்வு விசாரணை அமைப்புகளும் இருக்கின்றன. அவரிடம் முதல்வர் பணிந்து நிற்பதற்கான விலையை இந்தத் தேர்தலில் கொடுக்கப் போகிறார்.

நாட்டின் உற்பத்தி மையமாக தமிழகம் உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு ஆகியவற்றால் சிறு, சிறு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானம் இல்லாமல் தவிப்பது பற்றி முதல்வர் ஒரு கேள்விகூட கேட்கவில்லை. விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக முதல்வர் கேள்வி எழுப்பவில்லை.

புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வுக்கு எதிராக அவர் குரல் எழுப்பவில்லை. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற அனுமதியை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். எனவே தி.மு.க தலைவர் மு. க. ஸ்டாலின் முதல்வராக தமிழக மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.

இந்தப் போர் இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. ஆர். எஸ். எஸ் பா.ஜகவை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுத்து விட்டால் போதாது. முதலில் தமிழகத்திலிருந்து அவர்களைத் துரத்திவிட்டு, பின்னர் டில்லியில் இருந்து அகற்றவேண்டும். நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் பா.ஜக வின் ஆதிக்கத்தில் அகப்பட்டு தவிக்கிறது. ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க மரியாதையும், அன்பும் மட்டும் போதுமானது. அன்பையும், பாசத்தையும் தவிர தமிழர்களை எதுவும் கட்டுப்படுத்தாது. இந்த தேர்தலுக்கு பிறகு அதை பா.ஜ,க வினருக்கு புரிய வைப்போம்.' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35