கொழும்பில் 3 ஏக்கரில் கஞ்சா பயிர்ச்செய்கை :கஞ்சாவுடன் மூவர் சிக்கினர்

Published By: Digital Desk 2

29 Mar, 2021 | 12:35 PM
image

கொழும்பில் விசேட அதிரடிப்படையினர் , குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு  சுற்றிவளைப்புக்களில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு , ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்புக்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்ததாவது,

விசேட அதிரடிப்படையினரால் பாணம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 3 ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதால் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தப்பிச் சென்றுள்ள குறித்த சந்தேகநபர்கள் வசித்த இடத்திலிருந்து 5 தொலைபேசிகள் , 5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் உள்நாட்டு துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

  

இதேவேளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பேலியகொடை - நுகேபார பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 205 கிராம் ஹெரோயின் , 306 கிராம் கஞ்சா, 48 000 ரூபா பணம் என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19