7 ஓட்டத்தால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா

Published By: Vishnu

29 Mar, 2021 | 08:31 AM
image

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்திய அணி 2:1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி புனேயில் நேற்றிரவு நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இந்தியாவுக்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக ரிஷாத் பந்த் 78 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 67 ஓட்டங்களையும், ஹர்த்திக் பாண்டியா 65 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன் பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 7 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

அணி சார்பில் அதிகபடியாக டேவிட் மலன் 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க சாம் குர்ரன் 83 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

சர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும், பவுனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் மற்றும் நடராஜன் ஒரு விக்கெட்னையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக சாம் குர்ரனும், தொடரின் ஆட்டநாயகனாக ஜோனி பெயர்ஸ்டோவும் தெரிவானார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09