ஆறாவது நாளாகவும் சூயஸ் கால்வாயில் தொடரும் போராட்டம்

Published By: Vishnu

29 Mar, 2021 | 08:03 AM
image

சிக்கித் தவிக்கும் மெகா கொள்கலன் கப்பலை தொடர்ச்சியாக ஆறாவது நாளாக வெளியேற்ற சூயஸ் கால்வாய் அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலைமை சமூக ஊடகங்களில் பல நகைச்சுவைகளைத் தூண்டினாலும், இது உலகளாவிய கப்பல் துறைக்கு மிகுந்த கவலையையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

'எவர் கிவன்' கப்பலை பற்றிய முக்கிய தகவல்கள்

  • எவர் கிவன் 400 மீற்றர் நீளம் (1,312 அடி) மற்றும் 200,000 டொன் எடை கொண்டது, அதிகபட்சமாக 20,000 கொள்கலன்கள் கொள்ளளவு கொண்டது. தற்போது 18,300 கொள்கலன்களை கொண்டு செல்கிறது.
  • இந்த கப்பல் தாய்வானிய போக்குவரத்து நிறுவனமான எவர்க்ரீன் மரைன் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றாகும்.

செவ்வாய்க்கிழமை முதல் இது சூயஸ் கால்வாயில் சிக்கித் தவிக்கிறது, நீரோட்டமாக ஓடி, நீர்வழியின் குறுக்கே பக்கவாட்டாக சிக்குண்டது. முதலில் ஒரு காற்றழுத்தம் இந்த நிலைமைக்கான காரணம் என்று கருதப்பட்டது.

அந்த நேரத்தில் காற்றின் வேகம் 74 கிலோ மீற்றர் வேகத்தில் பதிவு செய்யப்பட்டது, ஆனால் சூயஸ் கால்வாய் ஆணையம் (SCA) செய்தியாளர்களிடம், கப்பல் சிக்கித் தவிக்க இது ஒரே காரணம் அல்ல எனக் கூறியது.

இந் நிலையில் தொழில்நுட்ப அல்லது மனித பிழைகள் ஏற்பட்டதா என்பதை விசாரிக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அடைப்பின் இருபுறமும் 193 கி.மீ (120 மைல்) கால்வாய் வழியாகச் செல்ல 369 கப்பல்கள்  காத்திருந்தன.

இதற்கிடையில், பிராண்ட் கண்காணிப்பு தளமான பிராண்ட்மென்ஷன்களின் நிகழ்நேர பகுப்பாய்வின்படி, #SuezBLOCKED என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டுவிட்டரில் 145,200 க்கும் மேற்பட்ட சமூக தொடர்புகள் உள்ளதாக கூறியுள்ளது.

உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம், சுமார் ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் சுமார் 8 சதவீத திரவ இயற்கை எரிவாயு ஒவ்வொரு நாளும் சூயஸ் கால்வாய் வழியாக செல்கின்றன.

கால்வாயின் வருவாய் ஒவ்வொரு நாளும் 14- 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொடுக்கிறது. தொற்றுநோய்க்கு முன்னர், சூயஸ் கால்வாய் வழியாக வர்த்தகம் எகிப்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீத பங்களிப்பினை வழங்கியதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி சனிக்கிழமை கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10