இயற்கை வளங்களை பாதுகாக்க அரசாங்கம் கவனம் செலுத்தும் : வனப்பகுதியை 30 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை - அமரவீர

28 Mar, 2021 | 05:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இயற்கை சூழல் அழிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய பாதுகாப்பு தரப்பினர் பிரத்தியேக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள் என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தங்காலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில்க கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிங்கராஜ வனப்பகுதியில்  மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த கூடிய தகவல்கள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. 

வனப்பகுதிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பொது மக்கள் முறைப்பாடளிக்கலாம். 

சுற்றுசூழலை பாதுகாக்க  பல நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன்,முறைப்பாடளிக்க அவசர தொலைப்பேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கராஜ வனப்பகுதி அழிக்கப்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்விடயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

அழிக்கப்பட்டு  ஹோட்டல் நிர்மாணிக்கப்படுவதாக குறிப்படப்பட்ட இடம் தனியாருக்கு சொந்தமானது எனவும், 40 வருட கால உறுதிப்படுத்திரத்தை ஆவணப்படுத்தியுளள்தாகவும், சமர்பிக்கப்பட்ட  இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஹோட்டல் நிர்மாணிக்கப்படுவதாக குறிப்பிட்டப்ட்ட இடம்  சிங்கராஜ வனப்பகுதில் இருந்து 3 கிலோ மீற்றருக்கு அப்பால் காணப்படுகிறது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையினை மீள்பரிசீலனை செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் விவகாரத்தை தங்களின் அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பல பொய்யான செய்திகள்  வெளியிடப்பட்டுள்ளமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இயற்கை வளங்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும்  வனப்பகுதியை 30 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

103 நதிகள் சுரகிமு கங்கா திட்டத்தின் ஊடாக 6 மாத காலத்திற்குள் அபிவிருத்தி செய்யப்படும்.  நதிகளை பாதுகாக்கும் பொறுப்பும், அதிகாரமும் பிரதேச சபைகளுக்கு வழங்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44