பசறை பஸ் விபத்து;பிள்ளைகளை எக்காரணம் கொண்டு எவருக்கும் வழங்க அனுமதிக்கப்போவதில்லை - உறவினர்கள்

Published By: Digital Desk 3

27 Mar, 2021 | 12:54 PM
image

பசறை விபத்தில் பெற்றோர்களை இழந்த மூன்று பிள்ளைகளையும் பொறுப்பேற்க, தான் தயாராக இருப்பதாக, அம்பாறை அரசாங்க வைத்தியசாலை வைத்திய நிபுனர் வஜிர ராஜபக்ச தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'மூன்று பிள்ளைகளையும் அப் பிள்ளைகளின் பாதுகாவலர்கள் என்னிடம் ஒப்படைக்க விருப்பம் தெரிவிப்பார்களேயானால், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். 

இம் மூன்று பிள்ளைகளையும் இணைத்துக்கொண்டு, எனது குடும்பத்தை பெரிதாக்கவே விரும்புகின்றேன். இப் பிள்ளைகள் மூவரது வருகையை எனது குடும்பத்தினர் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இப் பிள்ளைகளை விரைவில் சந்திக்கவுள்ளேன். மனிதாபிமான முறையிலேயே நான் செயற்படுகின்றேன். இன, மதம், ஜாதி எதனையும் நான் பார்க்கவில்லை. இப் பிள்ளைகளை பிரிக்க நினைக்கவில்லை. மூன்று பேரையும் ஒன்றாக வளர்க்கவே விரும்புகின்றேன். அப்பிள்ளைகள் தனது பாட்டியை விட்டு வர விரும்பாத பட்சத்தில், அவர்கள் பெரியவர்களாகும் வரை, அவர்களுக்கான உதவிகளை வழங்க எதிர்ப்பார்க்கின்றேன்' என்றும் கூறினார். 

ஆனால், மூன்று பிள்ளைகளின் பாட்டியும், உறவினர்கள் அனைவருமே அப்பிள்ளைகளை எக்காரணம் கொண்டு எவருக்கும் வழங்க அனுமதிக்கப்போவதில்லை. உதவிகள் செய்பவர்கள் இருப்பின், அவர்கள் தாராளமாக உதவிகளை வழங்கலாம். 

பிள்ளைகளின் பெற்றோரின் கனவினை நனவாக்கும் வகையில், பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து, அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வளம்பெற வைப்பதே எமது இலட்சியமென்று உறுதியாகக் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04