மனித உடலுக்கு ஒவ்வாத தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகிப்பதை தடைசெய்திருக்கின்றோம் - பந்துல குணவர்த்தன

Published By: Digital Desk 3

26 Mar, 2021 | 03:18 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மனித ஆகாரத்துக்கு பொருத்தமில்லாத 13 கொள்கலன்களில் வந்த தேங்காய் எண்ணெய் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருகின்றது. அதுவரை அவற்றை நாட்டுக்குள் விநியோகிப்பதை தடைசெய்திருக்கின்றோம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை அடிப்படையாகக்கொண்டு, மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், நச்சுத்தன்மை கலந்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் சங்கம் மாத்தளை பிரதேசத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. அதில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதனை நாட்டுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த சர்ச்சைக்குரிய கருத்து வெளியிடப்பட்டு மறு நாள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளை சந்தித்து, இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டேன். தற்போது விசாரணை இடம்பெற்று வருகின்றது. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் அனைத்துவகையான ஆகார வகைகளும் தர நிர்ணய நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவில் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அதனை நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் தர நிர்ணய நிறுவனம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டது. அதில் சுகாதார அமைச்சின் அறிக்கையில், 13 கொள்களன்களில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் தேங்காய் எண்ணெய் மனித ஆகாரத்துக்கு பொருத்தமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அதனை மீள் ஏற்றுமதி செய்யுமாறு உத்தரவிட்டிருப்பதாக சுங்க திணைக்கள பணிப்பாளர் எமக்கு தெரிவித்திருந்தார்.

அத்துடன் இந்த தேங்காய் எண்ணெய் தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. அவர்களது விசாரணை அறிக்கை கிடைக்கும்வரை குறித்த தேங்காய் எண்ணெய் தொகையை தற்போது களஞ்சியப்படுத்தி இருக்கின்றோம். அந்த தேங்காய் எண்ணெய் நுகர்வோர் பெற்றுக்கொள்ளும் வகையில் விநியோகிகப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37