இந்தியாவில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக் கோட்டையில் ஒரு இளம் பெண்ணொருவர் நிர்வாணமாக கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் குறித்த பெண்ணின் காதலனே கொலை செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண் திருமணம் செய்து கொள்ள காதலனை வலியுறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் குறித்த கொலையினை செய்துள்ளமை பொலிஸ் விசாரணையில் மூலம் தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்ட 19 வயதான ஷகீலா (பெயர் மாற்றப்பட்டது) கடந்த 18 ஆம் திகதி புதுவை அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்து திடீரென ஷகீலா காணாமல் போணமையால்,ஷகீலாவின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயதுள்ளார். 

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் புதுவையைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞனுடன் ஷகீலா ஓடிப் போயிருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தியபோது ஷகீலாவை அவர் கொலை செய்தமை தெரியவந்துள்ளது.

செஞ்சிக் கோட்டைக்கு ஷகீலாவை கூட்டிக் கொண்டு போன விஜயிடம் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு ஷகீலா வற்புறுத்தியுள்ளார். அதற்கு விஜய், முதலில் இருவரும் சந்தோஷமாக இருப்போம் பின்னர் கல்யாணம் என கூறியதை நம்பிய ஷகிலா, விஜயுடன் உடலுறவில் ஈடுப்பட்டுள்ளார்.

பின்னர் ஷகிலாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த விஜய், பெரிய கல்லை எடுத்து அவரது முகத்தில் போட்டு முகம் அடையாளம் தெரியாத வகையில் சிதைத்துள்ளார். பிறகு உடலை பாறை இடுக்குகளுக்குள் போட்டு விட்டுத் தப்பி சென்றதாக பொலிஸார் விசாரணையில் விஜய் தெரிவித்துள்ளார்.