இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்குவதில் கால தாமதம் ஏற்படாது : சன்ன ஜயசுமன

Published By: Digital Desk 3

25 Mar, 2021 | 03:16 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்ட்ரசெனேகா கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக அதனைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித கால தாமதமும் ஏற்படாது. 

தற்போது 4 இலட்சம் அஸ்ட்ரசெனேகா தடுப்பூசிகள் கையிறுப்பில் உள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்ட்ரசெனேகா கொவிட் தடுப்பூசிகளை வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்வதனை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக எமக்கு அவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்படவில்லை.

முதற்கட்டமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை உரிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதுவரை இலங்கைக்கு 12 இலட்சத்து
64,000 அஸ்ட்ரசெனேகா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

தற்போது 4 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஏப்ரல் 10 ஆம் திகதியின் பின்னரே இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

எனவே கையிருப்பில் உள்ள 4 இலட்சம் தடுப்பூசிகளை உபயோகித்து மே மாத இறுதி வரை இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசிகளை வழங்க முடியும். எனவே இதில் எவ்வித கால தாமதமும் ஏற்படாது. இது தொடர்பில் இந்தியாவுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்தோடு மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தியோகபூர்வமற்ற ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47