உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதை நிறுத்தியது இந்தியா

Published By: Digital Desk 3

25 Mar, 2021 | 03:02 PM
image

உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதை தற்காலிகமாக இந்தியா நிறுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கான கேள்வி அதிகரித்துள்ளதால் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக இந்தியாவின் மருந்து நிறுவனமான சீரம் அறிவித்துள்ளது.  

இந்தியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு தேவைகளை நிறைவு செய்வதற்காகவே ஏற்றுமதி நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறைந்த வருமானம் பெறும் 64 நாடுகளுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் கோவக்ஸ் தடுப்பூசி  ஏற்றுமதி நடவடிக்கைகளும்  தாமதம் ஆகும் என யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்படும் என இந்தியா உறுதி அளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

15 இலட்சம்  ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனேகா கொவிட் தடுப்பூசிகளை இலங்கை கோரியிருந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 5 இலட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டதாகவும், மேலும் 5 இலட்சம் தடுப்பு மருந்துகள் எதிர்காலத்தில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01