புலிகளின் முன்னாள் ஊடகத்துறைப் பொறுப்பாளர் தயா­ மாஸ்டர் பிணையில் நேற்று மாலை விடு­தலை செய்­யப்­பட் டார். பிணை­யா­ளர்கள் நீதி­மன்­றத்தில் கையொப்­ப­மிட்­ட­தை­ய­டுத்தே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் அரச விரோத தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் இணைந்து அர­சுக்­கெ­தி­ராக செயற்­பட்டார் என குற்றம் சாட்­டப்­பட்ட இவ­ருக்கு பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களின் கீழ் தொடுக்­கப்­பட்ட வழக்கில் வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி புதிய பிணை நிபந்­த­ணையை கடந்தவாரம் வித்­தித்­தி­ருந்தார்.

இந் நிலையில் ஒரு லட்சம் ரூபா பொறு­ம­தி­யான நான்கு அரச உத்­தி­யோ­கத்­தர்­களை கொண்ட பிணை­யிலும் ஐந்து லட்சம் ரூபா ரொக்கப்­பி­ணை­யிலும் செல்ல நீதி­மன்றம் நேற்று உத்­தி­ர­விட்­டது.

இந் நிலையில் நான்கு அரச உத்­தி­யோ­கத்­தர்கள்நேற்று நீதி­மன்­றத்தில் கையொப்­ப­மிட்­ட­துடன் பணமும் நீதி­மன்­றத்தில் செலுத்தப்­பட்­டது அதன் பின்னரே தயா மாஸ்டர் பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்டார்.

இதே­வேளை தயா மாஸ்டர் தினமும் யாழ் பொலிஸ் நிலை­யத்தில் காலை 9 மணியில் இருந்து 12 மணி­வ­ரைக்குள் கையொப்­ப­மிட்­வேண்டும் எனவும் வட மாகாணத்தை விட்டு செல்ல முடியாது என்ற நிபந்தணைகளும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளன.