நாம் எந்தவொரு இனத்தையும் இலக்கு வைக்கவில்லை - விதுர விக்கிரமநாயக்க 

Published By: Digital Desk 4

24 Mar, 2021 | 09:00 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையில் வடக்கு, கிழக்கில் மாத்திரம் அல்லாது சகல பகுதிகளிலும் உள்ள தொல்பொருள் பகுதிகளையும் ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் , கிராமிய சிற்ப கலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார். 

Articles Tagged Under: Rights | Virakesari.lk

தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் எந்தவொரு இனத்தையும் இலக்கு வைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று  புதன்கிழமை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான ஸ்ரீதரனால் தொல்பொருள் விடயங்கள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இதன்போதே ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய எம்.பிக்கள் இந்த  தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப்பணிகளை கடுமையாக எதிர்த்ததுடன்  உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினர். இதற்கு பதில் தெரிவித்த போதே அமைச்சர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

தொல்பொருள் ஆய்வுகள் என்ற பெயரில் எந்தவொரு இனத்தையும், மதத்தையும் இலக்கு வைத்து நாம் செயற்படவில்லை. அதேபோல் எந்தவொரு இனத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றும் அல்ல.

இந்த எல்லைகளை தாண்டிநாம் செல்ல வேண்டும் என்றே நினைக்கின்றோம். பெளத்த பகுதிகள் மட்டுமல்லாது இந்து ஆலயங்களையும் மீள் நிர்மாணம் செய்ய நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். 

எனவே ஆய்வுகளின் மூலமாக மட்டுமே நாட்டின் தொன்மையான பகுதிகளை கண்டறிய முடியும். அதற்கு இடமளிக்க வேண்டும்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், இந்த தொல்பொருள் பிரதேசங்கள் பெளத்தர்களுக்கோ அல்லது இந்துக்களுக்கோ சொந்தமானவை அல்ல. இது முழு உலகிற்கும் சொந்தமானவை. அதனை விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாம் தெற்கில் ஆய்வுகளை செய்யாது வடக்கில் மட்டும் ஆய்வுகளை செய்கின்றோம் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. ஆனால் இந்த பூமியில் எவ்வளவு தொல்லியல் பகுதிகள் உள்ளது என எம்மால் கண்டறிய முடியாதுள்ளது. 

வடக்கில் மட்டும் அல்ல கிழக்குலும் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான பிரதேசங்கள் உள்ளன. எனவே அதனை கண்டறிய எமக்கு அனுமதிக்க வேண்டும்.

நாம் அனைவரும் இணைந்து இந்த முயற்சியை கையாள வேண்டும். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு வேண்டும். இந்த முயற்சிகள் மூலமாக ஒரு இனத்தின் உரிமையை மாத்திரம் முன்னிறுத்தவில்லை. இதனை விளங்கிக்கொள்ள வேண்டும். நாம் இது குறித்து ஆழமாக பேசி தீர்மானம் எடுப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51