European Image and Sound Association (EISA) இனால் ‘European Consumer Smartphone 2016-17’ என்ற இனங்காணல் அங்கீகாரத்தை Huawei P9 சம்பாதித்துள்ளமை தொடர்பில் Huawei Consumer Business Group (BG) அறிவித்துள்ளது. 

எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி மிகச் சிறந்த தரம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை தொடர்ந்தும் பேணிவருவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டிற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில், இப்பிரிவில் தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் Huawei இந்த இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன் புகைப்படவியல் தொழில்நுட்பத்திற்கு மறுவடிவம் கொடுக்கும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள Huawei P9, சர்வதேசரீதியாக பிரபலமான வர்த்தகநாமமாக திகழ்ந்துவருகின்ற Leica Camera AG உடன் இணைந்து இணை வடிவமைப்புச் செய்யப்பட்ட முதலாவது ஸ்மார்ட்போன் உற்பத்தியாகத் திகழ்கின்றது. 

P9 இன் இரட்டை வில்லைகளைக் கொண்ட கமரா, ஸ்மார்ட்போன் புகைப்படவியலை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச்சென்று, துல்லியமான வர்ணங்கள் மற்றும் ஈர்ப்பான கறுப்பு மற்றும் வெள்ளை படங்களை இணையற்ற தெளிவுடனும் உண்மையான தன்மை மாறாமலும் கைவசப்படுத்துவதற்கு மக்களுக்கு இடமளிக்கின்றது.

Huawei P9 ஸ்மார்ட்போனுக்கு European Consumer Smartphone 2016-17 என்ற இனங்காணல் அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை தொடர்பில் EISA இன் நடுவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“சில சமயங்களில் முக்கியமான விடயங்களின் மதிப்பினை குறைவாக எடைபோட்டு விட முடியாது, அது Huawei P9 இற்கு கச்சிதமாகப் பொருந்துகின்றது. 

Full HD resolution தொழில்நுட்பத்துடனான 5.2 அங்குல IPS-NEO LCD, octa-core HiSilicon Kirin 955 SoC மற்றும் Emotion UI 4.1 உடனான Android OS 6.0  தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள P9, பல்வேறுபட்ட மூலப்பொருட்களின் முடிவு வேலைப்பாடுகளுடன் கிடைக்கப் பெறுகின்றது. அது மட்டுமல்ல, Leica இன் புகைப்படவியல் தொழில்நுட்பத்தை மொபைல் சாதனங்களில் அறிமுகப்படுத்தியுள்ள முதலாவது உற்பத்தியாளராகவும் Huawei சாதனை படைத்துள்ளது. 

இரட்டை வில்லைகளைக் கொண்டுள்ள கமரா, மிகவும் அரிதான வெளிச்சத்திலும் துல்லியமாக தருணங்களை வசப்படுத்தி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மிகவும் தெளிவாக வழங்குகின்றது. 3,000 mAh மின்கலமானது ஒவ்வொரு தருணத்தையும் வசப்படுத்துவதற்கு தேவையான மின்வலுவை தாராளமாக வழங்குவதுடன்வ் வைர வெட்டுக்களுடனான முனைகளைக் கொண்ட முடிவு வேலைப்பாடு மற்றும் வட்ட வளைவிலான உச்சிகள் கொண்ட உடலமைப்பு 2.5D கண்ணாடி வடிவமைப்புடன் இணைந்து, P9 இனை நடைமுறைச்சாத்தியம் மற்றும் அழகு ஆகியவற்றை சம அளவில் கொண்டுள்ள ஸ்மார்ட்போனாக மாற்றியமைத்துள்ளது.

இலங்கையில் Huawei Device இற்கான உள்நாட்டுத் தலைமை அதிகாரியான ஹென்றி லியு கூறுகையில்,

“இலங்கையில் கிடைக்கப்பெறுகின்ற Huawei P9 ஆனது பிரதானமான ஸ்மார்ட்போன் தகைமைகளை வழங்கி, எமது மகத்தான தூதுவர்களாக உள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த பெறுபேற்றுத்திறனை வழங்குகின்றது”. 

இலங்கையிலுள்ள எமது தீவிர ரசிகர்களின் வாழ்க்கைமுறையை மேம்படுத்தும் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தை நாம் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றோம். ஒட்டுமொத்ததில் மிகச் சிறந்த அனுபவத்திற்கு P9 மற்றுமொரு மிகச் சிறந்த உதாரணமாகும்”.

இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட முதற்தொகுதி Huawei P9 ஸ்மார்ட்போன்கள் ஒரு வாரத்தினுள் விற்றுத் தீர்ந்து விட்டன. 2016 ஆம் ஆண்டில் கணிசமான வளர்ச்சியை Huawei எதிர்பார்த்துள்ளதுடன் அது கடந்த ஆண்டிலும் ஈடுஇணையற்ற சாதனைகளைப் படைத்திருந்தது. 

GFK இன் புள்ளிவிபரங்களுக்கு அமைவாக இலங்கையில் 2016 ஆண்டின் முதற்காலாண்டில் 23.3% சந்தைப் பங்கினை Huawei பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் நாட்டில் இரண்டாம் இடத்தில் திகழ்ந்து வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் என்ற தனது ஸ்தானத்தை மேலும் விரைவுபடுத்தி வருகின்றது. 

Brand Finance இன் அறிவிப்பிற்கு அமைவாக 2016 ஆம் ஆண்டில் உலகில் மிகவும் பெறுமதிகொண்ட 100 வர்த்தகநாமங்களில் 47 ஆவது ஸ்தானத்தில் Huawei  தரப்படுத்தப்பட்டுள்ளது.