சூயஸ் கால்வாயில் சிக்கிய பாரிய கொள்கலன் கப்பல்

Published By: Digital Desk 3

24 Mar, 2021 | 05:21 PM
image

உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான எகிப்தின் சூயஸ் கால்வாயில் வணிகக் கப்பல் சிக்குண்டுள்ளது. 

கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி, பக்கவாட்டில் சிக்கிக் கொண்ட இந்த கப்பலால், அந்த பாதையில் ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கொள்கலன்களுடன் புறப்பட்ட  கப்பல், மலேசியா வழியாக பயணித்து மார்ச் 22, திங்கட்கிழமை இரவு எகிப்திலுள்ள சூயஸ்கால்வாயை வந்தடைந்தது. மார்ச் 23, செவ்வாய் அதிகாலை 7:40 மணியளவில் அங்கிருந்து கிளம்யிய கப்பல், கால்வாய் வழியாக நெதர்லாந்தின் ரோட்டர்டாமுக்கு (Rotterdam) சென்றுகொண்டிருந்தது.

அப்போது, திடீரென்று வீசிய பலத்த காற்றால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, முன்பக்கம்  கால்வாயின் வடக்குபக்க சுவற்றின் மீது மோதியது. அடுத்தகணமே கப்பலின் பின்பக்கம் மேற்கு திசையில் இழுத்து தள்ளப்பட்டு மற்றொருபக்க சுவரில் மோதி நின்றது.

இந்த நிகழ்வை, மற்றொரு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த ஜூலியன் கோனா (Julianne cona) என்ற பெண் ஒருவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவேற்றி "ship is super stuck” என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சூயஸ் நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது,

கப்பலை மீட்டெடுத்து நிலைமையை சரிசெய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். கப்பல் மோதியிருக்கும் கால்வாயின் இரண்டு பகுதிகளிலும் தோண்டி மணலை அப்புறப்படுத்தி மீட்டெடுக்க திட்டமிட்டிருக்கிறோம். இரண்டு நாட்களில் நிலைமை சீராகும் என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52