வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சனைக்குட்பட்டவர்களுக்கு உதவும் நடமாடும் சேவை : நாளை முதல் ஆரம்பம்

Published By: Robert

16 Aug, 2016 | 09:17 AM
image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற பலர் அதிலும் விசேடமாக வீட்டுப் பணிப்பெண்களாக சென்றுள்ள பெண்களில் பலர் பல்வேறு விதமான பிரச்சினைகளை இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுதல், மத்திய கிழக்கில் வேலை செய்யும் வீடுகளில் துன்புறுத்தப்படுதல், துன்புறுத்தல் தாங்க முடியாமால் அந்த வீடுகளில் இருந்து தப்பியோடி தூதரகத்தில் தஞ்சமடைதல் அல்லது தற்கொலை செய்துகொள்ளுதல் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் திருப்பி அனுப்பாமல் வீட்டு எஜமானர்களால் தடுத்து வைக்கப்படுதல். 

நீண்ட காலம் வீட்டாரோடு தொடர்புகள் இல்லாத நிலையில் இருத்தல், காணமால் போகுதல், சம்பளம் முறையாக கிடைக்காமை போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறனவர்கள்  தங்கள் பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெற வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும்.

ஆனால் பலருக்கு இவ்வாறு முறைப்பாடு செய்யும் முறை தெரியாதிருத்தல், முறைபாடு செய்யும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பற்றிய தெளிவு இல்லாமை என்பவற்றால் முறைபாடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு உதவுவதற்காகவே நடமாடும் சேவைகளை பிரிடோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

நடமாடும் சேவையில் பங்குபற்றுபவர்களின் முறைப்பாடுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிகயத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு சமர்ப்பித்து உகந்த நடவடிக்கை மேற்கொள்ள பிரிடோ நிறுவனம் உதவிகளை மேற்கொள்ளும்.

இந்த நடமாடும் சேவை நாளை காலை 9 மணிமுதல் டயகம நகர மண்டபத்தில் நடைபெறும். மேற்கூறிய பிரச்சனைகள் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதன்போது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விபரங்களை 0772277441 அல்லது 071 4661486 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும். 

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11
news-image

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட...

2024-03-28 09:46:04