முக்கிய கட்டளைச்சட்டத்தை திருத்த மாகாணசபைகளின் நிலைப்பாடுகளைப் பெற தீர்மானம்

24 Mar, 2021 | 12:40 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான முக்கிய கட்டளைச்சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய மாகாணசபைகளின் நிலைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் சட்டமாக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான முக்கிய கட்டளை சட்டங்களான மாநகரசபை கட்டளை சட்டம் , நகரசபை கட்டளைச்சட்டம் மற்றும் பிரதேசசபை சட்டம் போன்றவற்றை புதுப்பிப்பதற்காக சட்ட வரைஞரால் குறித்த சட்ட மூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

குறித்த சட்ட மூலத்தில் மேலும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனவே ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை சட்டமா அதிபரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள  திருத்தங்கள் உள்ளடங்கலாக , மேலும் திருத்தியமைத்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் 154 (எ) உறுப்புரைக்கமைய மாகாணசபைகளின் நிலைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கு அரச சேவைகள் , மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19