துபாய் துணை ஆட்சியாளரும் ஐக்கிய அரபு எமீரக நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் காலமானார்

Published By: Vishnu

24 Mar, 2021 | 12:03 PM
image

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிதி அமைச்சரும் துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் தனது 75 ஆவது வயதில் காலமானார். 

இந்த தகவலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளரும், ஷேக் ஹம்தானின் சகோதரருமான ஷேக் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம் அவரது டுவிட்டர் பக்கத்தில் புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.

ஷேக் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம், உயிரிழந்த தனது சகோதரரின் புகைப் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, “நாங்கள் கடவுளுக்கு சொந்தமானவர்கள், அவரிடம் நாங்கள் திரும்புவோம்… கடவுள் உங்களுக்கு இரக்கம் காட்டட்டும், என் சகோதரர், என் ஆதரவும் என் தோழரும் ஆவார் ” என பதிவிட்டுள்ளார்.

ஷேக் ஹம்தான் 1971 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதி அமைச்சராக பணியாற்றினார், மேலும் 2006 இல் துபாயின் துணை ஆட்சியாளராகவும் ஆனார்.

துபாய் நகராட்சி, அல் மக்தூம் அறக்கட்டளை, துபாய் அலுமினியம் (DUBAL) மற்றும் துபாய் நேச்சுரல் கேஸ் கம்பெனி லிமிடெட், துபாய் உலக வர்த்தக மையம் போன்ற பல உயர் மட்ட அரசு நிறுவனங்களுக்கு ஷேக் ஹம்தான் தலைமை தாங்குகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10