சீனாவில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தங்க முகக்கவசம்

Published By: Digital Desk 3

24 Mar, 2021 | 10:33 AM
image

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட  மூவாயிரம் ஆண்டுகள் பழமையான  தங்க முகக்கவசம்  சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

சான்சிங்டுய் தொல்பொருள் தளத்தில் காணப்பட்ட வெண்கல யுகத்தைச் சேர்ந்த 500 நினைவுச்சின்னங்களில் இந்த தங்க முகக்கவச கலைப்பொருளும் ஒன்றாகும்.

கி.மு 316 க்கு முன்னர் இப்பகுதியை ஆண்ட பண்டைய ஷூ மாநிலத்தைப் பற்றிய புதிய நுண்ணறிவுகளை இந்த கண்டுபிடிப்பு வழங்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் மர்மமான அரை முகம் கொண்ட முகக்கவசம் சமூகவலைத்தளங்களில் பிரபலமான நினைவு மற்றும் அஞ்சலி காணொளிகளை உருவாக்கியுள்ளது.

சனிக்கிழமையன்று சமீபத்திய கண்டுபிடிப்புகள் அறிவிக்கப்பட்டவுடன், மைக்ரோ பிளாக்கிங் இயங்குதளமான வெய்போவின் பயனர்கள் பொப் கலாச்சார பிரமுகர்களின் முகங்களில் முகக்கவசத்தை பொருத்தி படங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளனர்.

சான்சிங்டுய் தங்க முகக்கவசப் புகைப்பட வடிவமைப்பு போட்டி  #Sanxingduigoldmaskphotoeditingcompetition என்ற ஹேஷ்டேக் கிட்டத்தட்ட 4 மில்லியன் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது. 

மேலும் நெட்டிசன்களால் அதிர்ச்சி தரும் மற்றும் அழகான முகக்கவசத்தை பாராட்டி ஏராளமான பதிவுகள் உருவாக்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right