67 ஆவது இந்திய திரைப்பட விருது; வெற்றியாளர்களின் முழுப் பட்டியல்

Published By: Vishnu

23 Mar, 2021 | 10:28 AM
image

67 ஆவது இந்திய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. 

2019 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இதில் ’அசுரன்’ படத்துக்காக சிறந்த நடிகராக தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விருதை ’போஸ்லே’ திரைப்படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாயுடன் தனுஷ் பகிர்ந்து கொள்கிறார். தனுஷ் ஏற்கெனவே ’ஆடுகளம்’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த தமிழ்த் திரைப்படமாகவும் ’அசுரன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

’சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த உறுதுணை நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிறந்த ஒலியமைப்புக்காக ரசுல் பூக்குட்டி விருது பெற்றுள்ளார்.

’கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது வழங்கப்படுகிறது. இசையமைப்பாளர் டி.இமானுக்கு, ’விஸ்வாசம்’ படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது கிடைத்துள்ளது.


தேசிய விருதுகள்: முழுப் பட்டியல்

  • சிறந்த படம் - மரைக்காயர் (மலையாளம்)
  • சிறந்த இயக்குநர் - சஞ்சய் பூரண் சிங் செளகான் (ஹிந்தி)
  • சிறந்த நடிகை - கங்கனா ரணாவத் (மணிகர்னிகா & பங்கா)
  • சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்), மனோஜ் பாஜ்பாய் (போஸ்லே)
  • சிறந்த அறிமுக இயக்குநர் - மதுகுட்டி சேவியர் (ஹெலன்)
  • நர்கீஸ் தத் தேசிய ஒருமைப்பாடு விருது - தாஜ்மஹால் (மராத்தி)
  • சிறந்த பொழுதுபோக்குப் படம் - மஹர்ஷி (தெலுங்கு)
  • சமூக நலனுக்கான சிறந்த படம் - ஆனந்தி கோபால் (மராத்தி)
  • சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம் - வாட்டர் பரியல் (மோன்பா)
  • சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி
  • சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோஷி
  • சிறந்த குழந்தை நட்சத்திரம் -  நாக விஷால் (கேடி (எ) கருப்புதுரை)
  • சிறந்த பாடகர் - பி ப்ராக் (கேசரி, ஹிந்தி)
  • சிறந்த பாடகி - சவானி ரவிந்திரா (பார்டோ, மராத்தி)
  • சிறந்த வசனம் - தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் (ஹிந்தி)
  • சிறந்த திரைக்கதை (தழுவல்) - கும்நமி
  • சிறந்த அசல் திரைக்கதை - ஜேயஸ்தோபுத்ரோ (வங்காளம்)
  • சிறந்த ஒலி அமைப்பு (Re-recordist of final mixed track) - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)
  • சிறந்த ஒலி அமைப்பு - லியுடஹ் (காஸி)
  • சிறந்த படத்தொகுப்பு - நவீன் நூலி (ஜெர்ஸி, தெலுங்கு)
  • சிறந்த கலை இயக்கம் - ஆனந்தி கோபால் (மராத்தி)
  • சிறந்த ஒப்பனை - ரஞ்சித் (ஹெலன், மலையாளம்)
  • சிறந்த இசையமைப்பாளர் - இமான் (விஸ்வாசம்)
  • சிறந்த பின்னணி இசை - பிரபுத்தா பானர்ஜி (வங்காளம்)
  • சிறந்த பாடலாசிரியர் - பிரபா வர்மா (கொலாம்பி, மலையாளம்)
  • சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - மரைக்காயர் (மலையாளம்)
  • சிறந்த நடனம் - ராஜு சுந்தரம் (மஹர்ஷி, தெலுங்கு)
  • திரையுலகுக்கு ஏற்ற மாநிலம்  -  சிக்கிம்
  • சிறப்பு விருது - ஒத்த செருப்பு
  • சிறந்த ஆடை வடிவமைப்பு - சுஜித் சுதாகரன், வி. சாய் (மரைக்காயர், மலையாளம்)
  • சிறந்த சண்டை இயக்கம் - அவனே ஸ்ரீமன்நாராயணா (கன்னடம்)
  • சிறந்த ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்)
  • சிறந்த குழந்தைகள் படம் - கஸ்தூரி (ஹிந்தி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37