குண்டுத்தாக்குதலில் மூளை பாதித்ததால் சந்திரிகா புலம்பிக்கொண்டிருக்கிறார்

Published By: Ponmalar

15 Aug, 2016 | 07:47 PM
image

(க.கமலநாதன்)

யுத்தத்தில் நான்கில் மூன்று பகுதியை தனது காலத்திலேயே முடித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பெருமிதம் அடைகின்றார். புலிகளின் குண்டுத்தாக்குதலுக் இலக்காகி மூளை பாதிக்கப்பட்டமையினாலே அவர் புலம்புகின்றார்.

அவரது ஆட்சிக் காலத்திலேயே இராணுவத்தினர் புலிகளிடத்தில் மூன்று முறை தோல்வியடைந்தனர் என தூய்மையான ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாகொடை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில்,

யுத்த வெற்றிக்கு எனது ஆட்சி காலத்தில் நான்கில் மூன்று வீதம்  பங்களிப்பு கிடைத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சிய யுத்த வெற்றிக்கு தனது பங்களிப்பினை ஓரளவு செய்தது. மஹிந்த நான்கில் ஒரு வீத்தினாலேயே யுத்த வெற்றிக்கு பங்களிப்பு செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார். 

அதன் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்காவும் மஹிந்தவும் நான்கில் மூன்று நான்கில் ஒன்று என்ற வீதத்தில் யுத்த வெற்றிக்கு பங்களிப்புச் செய்துள்ளனர். அவ்வாறாயின் ஐக்கிய தேசிய கட்சியின் பங்களிப்பு யுத்த வெற்றிக்கு எப்பபோது கிடைத்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதேபோல் இந்த விடயத்தை தெளிவுபடுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க யுத்த வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பங்களிப்பு எவ்வாறானாதாக இருந்தது. என்றும் இதுவரை காலம் யுத்த வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பங்களிப்பும் உள்ளதென அக்கட்சியினர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்பது குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிகாலத்திலேயே யுத்த களத்திள் இராணுவத்தினர் படுதோல்விகள் மூன்றை சந்தித்தனர். 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவப் படைத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டில் வன்னியிலிருந்த ஒட்டுமொத்த இராணுவப்படைத்தளங்களும் முற்றாக அழிக்கப்பட்டன. அதன் பின்னர் ஆணையிரவு படைத்தளம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது.இம்மூன்று சம்பவங்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்திலேயே இடம்பெற்றன.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க புலிகளின் குண்டுதாக்குதலுக்கு இலக்காகியிருந்தார். அதனால் அவருக்கு ஏற்பட்ட மூளை பாதிப்பினாலேயே அவர் இவ்வாறு புலம்பிக்கொண்டிருக்கிறார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04