அநுராதபுரம் சந்தஹிரு தூபியில் வைப்பதற்காக புதையல் பொருட்களை வழங்க கால அவகாசம்

Published By: Digital Desk 4

22 Mar, 2021 | 09:42 PM
image

அநுராதபுரம் - சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் வைப்பு செய்வதற்காக புதையல் பொருட்களை ஒப்படைப்பதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் நான்காவது பெரிய தாதுகோபுரமாக நிர்மாணிக்கப்படவுள்ள சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் புதையல் பொருட்களை வைப்பு செய்யும் மகோட்சவம் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதில் வைப்பு செய்வதற்கான புதையல் பொருட்களை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் கடந்த 20 ஆம் திகதி முதல் ஆரம்பமானது. 

புதையல் பொருட்களை பொறுப்பேற்கவென  பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள விஷேட குழுவினர் அனுராதபுரம், சந்தஹிரு சேய வளாகத்தில் பொருட்களை பொறுப்பேற்று வருகின்றனர்.

மூன்று தசாப்தங்களாக நீடித்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிக்க முப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கொண்ட தியாகங்களை நினைவு கூறும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சந்தஹிரு சேய தூபியின் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.  

இதற்கான பூரண ஒத்துழைப்பை முப்படையினர், பக்தர்கள் மற்றும் தனவந்தர்களினால் வழங்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்தத் தாது கோபுரத்தில் நாற்சதுர அறைக்குள் பெறுமதியான புதையல் பொருட்களை வைப்பு செய்ய தாய் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் பிள்ளைகளும் தங்களது மகன், கணவன் மற்றும் தந்தை சார்பாக பெறுமதி வாய்ந்த புதையல் பொருட்களை வழங்குமாறு அவர் விஷேட வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27