வீதி விபத்துக்களை தவிர்க்க செயற்திறன் மிக்க திட்டங்கள் அவசியம்: கரு

Published By: J.G.Stephan

22 Mar, 2021 | 06:04 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் வீதி விபத்துக்களினாலேயே அதிகளவானோர் உயிரிழப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அவற்றைத் தடுப்பதற்குரிய செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

பதுளை பசறை 13 ஆம் மைல்கல் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன் மேலும், பலர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனுடன் தொடர்புடைய வகையில் கரு ஜயசூரிய அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, இலங்கையில் பெருமளவானோர் வீதி விபத்துக்களின் காரணமாகவே உயிரிழக்கின்றார்கள். எனினும் அவற்றைத் தடுப்பதற்குரிய முறையான நடவடிக்கைகள் எவையும் தற்போதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதிப்பாதுகாப்பு செயலணியின் செயற்பாடுகள் குறைக்கப்பட்டு, தற்போது அவை வெறுமனே கட்டாயக் கடமையாக மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கையர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி செயற்திறனான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அப்பதிவில் வலியுறுத்தியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39