கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்: வடமாகாண ஆளுநர்

Published By: J.G.Stephan

22 Mar, 2021 | 05:27 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தின் பெரியவளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். 

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஆறுகளை பாதுகாப்போம். தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவி்கையில்,

மனித நாகரீகங்கள் நதிக்கரைகளிலிருந்தே தோற்றம் பெற்றுள்ளன. இவ்வாறு இயற்கை மீது மனிதன் செலுத்துகின்ற ஆதிக்கமானது, மனித வாழ்வுக்கு ஒவ்வாத சூழலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இன்று குடிநீருக்கான தட்டுப்பாடு இருக்கின்றது. இதேபோல் வடக்கு மாகாணத்தில் ஏனைய பிரதேசங்களிலும் இன்று குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில் நதிக்கரைகளில் சுத்தமான நீரை மனிதன் பெற்றான். ஆனால் இன்று குடிநீருக்கே பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய வழங்களில் ஒன்றாக காணப்படுகின்ற இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கனகராயன் ஆற்றுப்பகுதியில் கீழ் தொடர்ச்சியாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது. இது எதிர்காலத்தில் நீர்த் தேக்கத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

அரச அதிகாரிகள், அரச திணைக்களங்கள், சுற்று நிருபங்களை வைத்துக்கொண்டு கூட்டங்களையும் மாநாடுகளையும் நடாத்தி பொலிஸ் இராணுவத்தினரின் பாதுகாப்பினை பயன்படுத்தியும் இதனை கட்டுப்படுத்த முடியும் என்பதை விட, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற ஒவ்வொருவரும் தங்களது எதிர்கால சந்ததினை கருத்தில்  கொண்டு செயற்படுவார்கள் எனின் இவ்வாறான இயற்கை மீதான காடழிப்பு மணல் அகழ்வு என்பன இடம்பெறாது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35